லோக்சபா தேர்தலில் முரண்பாடு தேர்தல் ஆணையத்துக்கு, 'நோட்டீஸ்'

Updated : டிச 15, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Election, லோக்சபா, முரண்பாடு, நோட்டீஸ், கோர்ட், ஆணையம், ஓட்டு, எண்ணிக்கை

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பதிவானதாக கூறப்பட்ட ஓட்டுகளுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் இடையே அதிக அளவில் முரண்பாடுகள் உள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், 347 தொகுதிகளில் பதிவானதாக கூறப்பட்ட ஓட்டுகளுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் இடையே, அதிக அளவில் முரண்பாடுகள் உள்ளன. இந்த வித்தியாசம், ஒரு ஓட்டு முதல், ஒரு லட்சத்துக்கு அதிகமான ஓட்டுகள் வரை உள்ளன. இந்த முரண்பாடு, மொத்த ஓட்டுகளில், 10 சதவீதம் அளவுக்கு உள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலும், நாங்கள் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும், இந்த தகவல் தெரியவந்துஉள்ளது. நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடந்ததை உறுதி செய்ய வேண்டிய கடமை, தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தேர்தல் முடிவுகள் துல்லியமாக இருக்க வேண்டும்; இது, தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்த மனுவை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் பிப்ரவரிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
14-டிச-201919:19:07 IST Report Abuse
Anantharaman Srinivasan முதுகெலும்பு இல்லாத தேர்தல் ஆணையம். மத்தியஅரசின் கைப்பாவை.. நாம் வாக்களிப்பதே வேஸ்ட்...
Rate this:
Share this comment
Cancel
Raajan - Mumbai,இந்தியா
14-டிச-201914:03:17 IST Report Abuse
Raajan டி என் சேஷன் அவர்களுக்கு அப்புறம் வந்த அத்தனை தேர்தல் ஆனையர் எல்லாருமே ஆளுங்கட்சி காரர்களுக்கே சமர்ப்பணம் .
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
14-டிச-201908:45:18 IST Report Abuse
blocked user வாக்கு எண்ணும் இடத்தில குளறுபடி போல தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X