அரசியல் செய்தி

தமிழ்நாடு

காமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார்

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'மோசடி வழக்கில் சிறை சென்ற சிதம்பரம், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர் காமராஜருடன் தன்னை ஒப்பிட்டு, அவர்களின் தியாகத்தை களங்கப்படுத்தி விட்டார்' என, போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.



latest tamil news



சென்னை, புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் வீரமாணிக்க சிவா. அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:பல கோடி ரூபாய் மோசடி வழக்கில், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், டில்லி, திஹார் சிறையில், 106 நாட்கள் அடைக்கப் பட்டார். ஜாமினில் வெளிவந்த இவர், 7ம் தேதி, சென்னையில், காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, 'வ.உ.சி., - காமராஜர் போன்று, நானும் சிறை சென்று வந்துள்ளேன் என்பதை பெருமையாக கருதுகிறேன்' எனக் கூறினார்.


latest tamil news



சிதம்பரத்தின் பேச்சு, வ.உ.சி., போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை துாண்டிவிட்டதாகவும், தீரர் சுப்பிரமணிய சிவாவுக்கு ஆதரவு அளித்தார் என்பதற்காகவும், 40 ஆண்டுகள், வ.உ.சிதம்பரனார், கொடும் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். மேலும், காமராஜருடன் ஒப்பிட்டு பேசுவதற்கு, சிதம்பரம் தகுதியற்றவர்.தேசத் தலைவர்களின் தியாகங்களை, தன்னுடைய குற்றச் செயல்களுடன் ஒப்பிட்டு, வ.உ.சி., மற்றும் காமராஜர் போன்றோரை இழிவுப்படுத்தி பேசி, அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய சிதம்பரம் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
15-டிச-201913:38:56 IST Report Abuse
Sathya Dhara இப்படி வாசகர்களை சித்திரவதை செய்யாதீர்...
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
14-டிச-201922:33:48 IST Report Abuse
M S RAGHUNATHAN வ ஊ சி நாட்டுக்காக சொத்தை விற்றார். இந்த பசியோ சொத்துக்காக நாட்டை விற்றவர்.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
16-டிச-201916:15:23 IST Report Abuse
Sathya Dhara ரகுநாதன் அவர்களே....ஒரே வரியில் பசி என்ற துரோகியின் வரலாற்றினை செய்த அருமையான "தேச சேவைதனை " பளிச்சென்று உணர்த்தி விட்டீர்கள். இதை விட அருமையாக எழுதவே முடியாது. பாராட்டுக்கள்....
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
14-டிச-201921:07:54 IST Report Abuse
Nallavan Nallavan பெருந்தலைவர் காமராஜரும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரமும் பொருளாதாரக் குற்றங்கள் செய்து அதற்குத் தண்டனையாகவா சிறைக்குச் சென்றார்கள் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X