பார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (43+ 146)
Advertisement

'மேக் இன் இந்தியா என்பதற்கு பதிலாக, 'ரேப் இன் இந்தியா' என, மாற்றிக் கூறி விமர்சனம் செய்த, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபாவில் நேற்று கொந்தளிப்பான சூழல் நிலவியது.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி, எப்போது பார்த்தாலும், 'மேக் இன் இந்தியா' என்கிறார். ஆனால், எங்கு பார்த்தாலும், 'ரேப் இன் இந்தியா'வாகத் தான் தெரிகிறது' என்றார்.


பலாத்கார சம்பவங்கள்


உத்தர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை குறிப்பிட்டு, அவர் இவ்வாறு பேசினார். இந்நிலையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள விவகாரத்தை கிளப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. யாரும் எதிர்பாராத விதமாக, திருப்பம் அரங்கேறியது. சபை கூடியதும், பா.ஜ., - எம்.பி.,க்கள் எழுந்து, கோஷங்களை எழுப்பினர். 'ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அமளியில் இறங்கினர்.


பரபரப்பு


'வட கிழக்கு மாநில போராட்டப் பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்' என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பதிலடி தந்தனர். பா.ஜ., பெண் எம்.பி.,க்கள், சபையின் மையப் பகுதியை நோக்கி முன்னேறி, சத்தமாக கோஷங்களை எழுப்பவே, பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால், ''பிரக்யாவை மன்னிப்பு கேட்க வைத்தது போல், ராகுலை சபைக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்,'' என்றார்.

பெண்கள் நலத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தருமான ஸ்மிருதி இரானி பேசியதாவது: இந்த சபையின் உறுப்பினர், ராகுல்; இஷ்டம் போல பேச, அவருக்கு யார் உரிமை தந்தது? இந்தியாவில் உள்ள பெண்களாகிய எங்களை எல்லாம், பாலியல் பலாத்காரம் செய்ய வரும்படி, வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுக்கிறாரா அவர்?

'இந்திய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யயுங்கள்' என, நேரு குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக, அவர் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது; அவருக்கு, தண்டனையும் வழங்க வேண்டும். நாட்டின் வரலாற்றிலேயே, ஒரு கட்சியின் முக்கிய தலைவர், நாட்டிலுள்ள பெண்களை எல்லாம் அவமதிக்கும் வகையில் பேசுவது, வெட்கக்கேடு; அவமானம். இது தான், நாட்டு மக்களுக்கு, அவர் விடுக்கும் செய்தியா? இவ்வாறு, அவர் பேசினார்.
பா.ஜ., - எம்.பி., லக்கெட் சாட்டர்ஜி பேசுகையில், ''ராகுல் பேசியது, இந்திய பெண்களை மட்டுமல்ல, பாரதா மாதாவையே அவமதிக்கும் செயல்,'' என்றார். எதிர்க்கட்சி தரப்பில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது: ராகுல், இந்த சபையில் பேசவில்லை; சபைக்கு வெளியில் தான் பேசினார். அவர் பேசியதன் அர்த்தம் வேறு; அதை மாற்றி கூற வேண்டாம். நம் நாட்டில் பாலியல் பலாத்காரங்கள் அதிகமாக நடப்பதை சுட்டிக்காட்டி பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. மேக் இன் இந்தியாவுக்கு அவமானம் ஏதும் ஏற்படவில்லை. பெண்கள் தினந்தோறும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஏன் எந்த கருத்தும் கூறாமல் மவுனம் காக்கிறார்? இவ்வாறு, அவர் பேசினார்.

ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது: ராகுல் பேசியது, இந்த சபைக்கு மட்டுமல்ல; நம் நாட்டுக்கே அவமானம். அவர் கூறிய வார்த்தையைக் கூட, மீண்டும் குறிப்பிட மனம் வரவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவும், பிரதமர் உருவாக்கிய கோஷத்தை, இந்த வார்த்தைகளுடன் இணைத்துப் பேசுவது, மனதை புண்படுத்துவதாக உள்ளது. ராகுல், இந்த சபையில் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியில்லாதவர். இவ்வாறு, அவர் பேசினார்.

அப்போது, ராகுல் சபைக்குள் நுழைந்ததும், பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் ஆவேசமாக, 'மன்னிப்பு கேளுங்கள்' என கோஷம் போட, பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள், 'பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்' என கோஷம் போட, அமளி அதிகமாகி, சபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த அமளியின்போது, பிரதமர் நரேந்திர மோடியும், காங்., - எம்.பி., ராகுலும் சபையில் இருந்தனர். ராஜ்யசபாவிலும், இதே விவகாரத்துக்காக அமளி கிளம்பியதால், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.


மன்னிப்பு கேட்க ராகுல் மறுப்பு


காங்கிரஸ் எம்.பி., ராகுல், நேற்று பார்லிமென்ட் வளாகத்தில் கூறியதாவது: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, வட கிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது குறித்து சபையில் பேச விடாமல் செய்ய வேண்டுமென்பதே, பா.ஜ.,வின் திட்டம். பல நாட்களுக்கு முன் பேசிய விஷயத்தை, இப்போது விவகாரம் ஆக்குவதன் பின்னணி அது தான். பிரச்னையை திசை திருப்பினாலும், மன்னிப்பு கேட்க மாட்டேன். மாறாக, பிரதமர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்; காரணம், இது தொடர்பாக ஒரு, 'வீடியோ'வை நான் வெளியிடப் போகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

அடுத்த சில நிமிடங்களில், ஏற்கனவே ஒரு முறை, பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோவை, ராகுல், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' வெளியிட்டார். அதில், 'நாட்டின் தலைநகரமான டில்லி, பாலியல் பலாத்கார சம்பவங்களின் தலைநகரமாகி விட்டது' என, பிரதமர்பேசியிருந்தார்.

இந்த வீடியோவை வெளியிட்ட ராகுல், அதற்கு கீழ், 'வடகிழக்கு மாநிலங்கள் தீப்பற்றி எரிகின்றன. நாட்டின் பொருளாதாரம் நாசமாகிவிட்டது. இந்த வீடியோவில் உள்ள பேச்சு ஆகிய மூன்று விஷயங்களுக்காகவும், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்' என,பதிவிட்டிருந்தார்.

பெண்களின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசியிருப்பது, வெட்கக்கேடான விஷயம்.
நிர்மலா சீதாராமன், மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,


ராகுல் மீது புகார்


காங்., தலைவர் ராகுலின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் நேற்று புகார் அளித்தனர். 'பாலியல் பலாத்கார விவகாரத்தை, அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் ராகுல் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே, பா.ஜ., - எம்.பி., பிரக்யா, தன்னை பயங்கரவாதி என, ராகுல் கூறியது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த புகாரை, பார்லி., உரிமை மீறல் குழுவுக்கு, சபாநாயகர் அனுப்பி உள்ளார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (43+ 146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
14-டிச-201921:18:48 IST Report Abuse
adithyan ஒருவன் என்ன நினைக்கிறானோ அவன் அதுவே ஆகிறான் என்பது முதுமொழி. கற்பழிப்பையே கலையாக காணும் ராகுலுக்கு அது புண்ணியமான காரியமாகவே தோன்றும். அது மட்டும் அல்ல அது தந்தை தாய் யமரபணுக்கள் இப்போது ராகுல் உடலில் ஓடுகின்றன. அப்படியானால் தாய் தந்தையர் எப்படியபவ்ட்டவர்களாக இருக்கவேண்டும்.இத்தாலியில் கற்பழிப்பு ஒரு மகிழ்வு தரும் பொழுதுபோக்காக இருக்கலாம். ராகுல் தவறாக இந்தியாவை கணக்கிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
moses - Manchester,யுனைடெட் கிங்டம்
14-டிச-201920:46:22 IST Report Abuse
moses என்ன ஒரு தலைப்பு? while people are dying and violence eruption in Bengal and Odissa and Kashmir and this BJP Newspaper not showing any sympathy for common people but discussing about this silly comment even though I agree with the comment whole heartedly We people are blaming Rahul as if he is the one raping Women or saying something that is not happening in the India everyday We as a Nation talk about women as God (except not allowing them in the temple) and Mother of earth and every kind of respec things in theory and claim to be our Indian tradition. But in reality World Newspapers (NOT BJP Newspaper of course) showing India is the most dangerous country in the world for women This is not Rahul Gandhi's word Can we ask whole world to apologise to India for declaring this statement we are most hypocrite people in the world.
Rate this:
Share this comment
krish - chennai,இந்தியா
15-டிச-201905:39:39 IST Report Abuse
krishஒரு தினசரி, செய்திகளை, செய்திகளாகத்தான் பிரசுரிக்கமுடியும். ஆனால், செய்திகளின் மேல் கருத்துக்களை பதிவு செய்ய யாவருக்கும் ( நீவீர் உட்பட) உரிமை உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. நம்மை அடிமைகளாக்கி, 200 ஆண்டுகளாக, பிரித்து ஆட்சி செய்து, இந்திய பண்பாட்டை, கலாச்சாரத்தை குழப்பி, சீரழித்த, கோலோச்சிய பிரிட்டிஷ் ஏகாபத்ய அந்நிய நாட்டில் அமர்ந்து, இந்திய கலாச்சார விஷயம் புரியாமல், அறியாமல், தெளியாமல், அந்நிய மத போதனையில், போதையில் சிக்கி, விபரீத அர்த்தங்களுடன், சிந்தனைகளுடன், தாய்மொழி மறந்து, அந்நிய மொழியில் விமர்சிப்பது நன்றன்று....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-டிச-201920:12:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தப்ண்ணிதிண்ணி நாசமாபோவப்போறான் பாருங்க வாய்க்குவந்ததிபேசிண்டு திரியும் இவனை அடக்கபோறது யாரு ஒரே அடியா தூக்கிபோடுங்கய்யா சிறையிலே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X