'நிர்பயா' குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது? வரும் 18 ல் முடிவு செய்கிறது டில்லி கோர்ட்

Updated : டிச 15, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (11+ 62)
Advertisement
 'நிர்பயா' குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது? வரும் 18 ல் முடிவு செய்கிறது டில்லி கோர்ட்

புதுடில்லி : டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, 'நிர்பயா' படுகொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, வருகிற 18ம் தேதிக்கு டில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த, 2012, டிச., 16 நள்ளிரவில், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்டார்.தள்ளுபடிஉயிருக்கு போராடிய நிலையில், டில்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர், தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, 2012, டிச., 29ல் உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக சிதைத்த குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ராம் சிங் என்ற குற்றவாளி, டில்லி திஹார் சிறையில், தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளி, சம்பவம் நடந்தபோது, 18 வயதுக்கு குறைவானவராக இருந்ததால், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் மூன்றாண்டுகள் அடைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக் ஷய் குமார் என்ற நான்கு குற்றவாளிகளுக்கு, 2017ல், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதில், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, மறுஆய்வு செய்யுமாறு, உச்ச நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து சட்ட தடைகளும் விலகிய நிலையில், வரும் 16ல், நால்வரும் துாக்கிலிடப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி அக் ஷய் குமார் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, வரும், 17ல் விசாரணைக்கு வருகிறது. 'குற்றவாளிகள் நால்வரையும், உடனடியாக துாக்கிலிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, நிர்பயாவின் தாய், டில்லி நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்தார்.


விசாரணை


இந்த மனு, கூடுதல் செஷன்ஸ் நீதீபதி சதீஷ் குமார் அரோரா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி கூறியதாவது: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும், உடனடியாக துாக்கிலிட, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், சீராய்வு மனு, வரும், 17ல், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த வழக்கு, 18க்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, குற்றவாளி அக் ஷய் குமார் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவுக்கு எதிராக, நிர்பயாவின் தாய், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


போராட்டம்


அப்போது, சீராய்வு மனு விசாரணைக்கு வரும் அன்று, நிர்பயாவின் தாயையும் அழைத்து, நீதிமன்றம் கருத்து கேட்கும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற வளாகத்தில், நிர்பயாவின் தாய், செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஏழு ஆண்டுகளுக்கு முன், என் மகள் பலாத்காரம் செய்யப்பட்ட, அதே டிச., 16ல், குற்றவாளிகள் நால்வரும் துாக்கிலிடப்பட வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகிறேன். அவர்கள் துாக்கிலிடப்படும் வரை, இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (11+ 62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-டிச-201923:30:59 IST Report Abuse
ஜெய் ஸ்ரீ ராம் தூக்கு கயிறு இல்லனா என்ன.. இந்த பாத்ரூமில வழக்கி விழுறது. கரண்ட் கம்பிய கடிக்கிறது.. இப்படி ஏதனா பண்ணுங்கப்பு...
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201918:10:38 IST Report Abuse
Gopu, மல்லபுரம் கோபால் சார் சொல்லுறா மாதிரி சுறா படம் தான் சரியான தண்டனை
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
14-டிச-201917:52:00 IST Report Abuse
Ashanmugam இந்த ஒரு வழக்குக்கு மட்டும் அதிரடி தீர்ப்பு மூலம் தூக்கு தண்டனை வழங்கினால், இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு வரும் எப்படி என்றால் இதுவரைக்கும் 15 தூக்கு தண்டனை கைதிகள் (இதற்கு மேலே கொலை குற்றம் புரிந்த) தூக்கு தண்டனை உறுதிபடுத்தியும் போடாமல், இவங்களை போடவேண்டிய நிர்பந்தம் என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் நியாயமான பதில் சொல்லியாகனும். எனவே இந்த தூக்கு தண்டனை நிறைவேற்ற மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் துணிச்சலும், தைரியமும் அறவே கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X