ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே ; நிர்மலா சீதாராமன்

Updated : டிச 15, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (11+ 13)
Advertisement
ஜி.எஸ்.டி, வரி , இழப்பீடு, நிர்மலா சீதாராமன், யூகங்களே, நிதி, முதலீடு, அன்னிய செலாவணி

புதுடில்லி : மத்திய அரசு சார்பாக, இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவருடன் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன், வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில், வெங்காயம் விலை, ஜி.எஸ்.டி., வரிவிகித மாற்றம் உள்ளிட்டவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் கூறிய பதில்களில் சில:

● ஜி.எஸ்.டி., விகிதங்களை அதிகரிப்பது குறித்து எனது அலுவலகத்தை தவிர பிற எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். ஜி.எஸ்.டி., கவுன்சிலுடன், இது குறித்து அமைச்சகம் இன்னும் எந்த பேச்சிலும் ஈடுபடவில்லை. எனவே தற்போதுள்ளவை அனைத்துமே குழப்பத்தை தரும் யூகங்களே.

● வெங்காயம் விலை குறித்து அமைச்சர்கள் குழு பரிசீலனை செய்துவருகிறது. தற்போது படிப்படியாக உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கும், பிரச்சனையை தீர்ப்பதற்கும், அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

● பொருளாதார நிலை குறித்த கணிப்புகளில் அரசு ஈடுபட விரும்பவில்லை. ஆனால், தேவைப்படும்போது தலையிடத் தயாராக இருக்கிறது.

● திவால் சட்டத்தில், திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு, லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து தெரிவித்ததாவது:

● வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக, பகுதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், அரசு இந்நிறுவனங்களுக்கு, 4.47 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு அனுமதி வழங்கியது. இதில் 1.29 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை மீட்பதற்கானதாகும்.

● அமைச்சரவை ஒப்புதல் அளித்த இரண்டு நாட்களுக்குள், 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 17 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பகுதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு வாரங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

● முதலீட்டு தரப்பில், முதலீட்டை அதிகரிக்க கடன்விரிவாக்கம், கார்ப்பரேட் வரி மற்றும் வங்கிகளுக்கு மறு மூலதனம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, கடந்த இரண்டு மாதங்களில், 32 மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிலுவை தொகையில், 60 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது.

● ரிசர்வ் வங்கியின் புதிய வட்டிவிகித திட்டத்தின் படி, நவம்பர் 27ம் தேதி வரையிலான காலத்தில், 72 ஆயிரத்து 201 கோடி ரூபாய் மதிப்பிலான, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மூலதன செலவுக்கான தொகையான, 3.38 லட்சம் கோடி ரூபாயில், 66 சதவீதம் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் மூலதன செலவுகள், தனியார் முதலீட்டுகள் அதிகரிக்க உதவும்.

● ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 32 மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான மூலதன செலவு, 98 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

● அன்னிய நேரடி முதலீட்டை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 2.49 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில், இதே காலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

● நடப்பு ஆண்டில் கூடுதலாக பெறப்பட்ட வரியில், 1.57 லட்சம் கோடி ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 1.23 லட்சமாக இருந்தது. இதுவும் நுகர்வுக்கு வழிவகுக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (11+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
14-டிச-201918:17:24 IST Report Abuse
Girija இவரிடம் இருக்கும் முக்கிய குறைபாடே எதிர்தரப்பிடம் என்ன செய்யலாம் என்று சுவையாகவும் ஆக்கபூர்வமாகவும் பேசி கருத்துக்களை உள்வாங்குவதில்லை. ஈமெயில் அனுப்பினாலும் பதில்போடுவதில்லை . நான் இவரிடத்தில் இருந்தால் ஜிஎஸ்டி ஆல் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்களின் பட்டியலை மாநில எம் எல் ஏக்களிடம் (எம் பி அல்ல) சேகரிக்க சொல்லி நேரடியாக பெற்று , அதிகாரிகளுடன் விவாதித்து உடனே நிவாரணம் வழங்கி இருப்பேன். இவ்வாறு இரண்டு மூன்று மாநிலங்களின் பாதிப்புகளை சரிசெய்யும்போதே மாற்றமாநிலங்களிலும் இதே வகையான தொழிலின் பாதிப்பு தானாக சரியாகிறது . உதாரணம் திருப்பூர், கோவை, காஞ்சிபுரம் சிறு குறு தொழில்களின் ஜிஎஸ்டி பாதிப்புக்கு தீர்வு காணும்போது இந்தியா முழுக்க அதேமாதிரியான தொழில்கள் புத்துயிர் பெற்று எழும். இதே போல் வங்கிகள் வியாபாரமுறை மாற வேண்டும் . இந்தியா முழுக்க ஒவ்வொருநாளும் போலி தனியார் நிறுவனங்களில் மக்கள் இழக்கும் பணம் நூறு கோடிக்கு மேல், இதைவரையறை படுத்தி அரசு வங்கிகளும் இந்த வியாபாரத்தில் நுழைந்தால் ரிசர்வ் வங்கியிடம் பெற்ற கடனை கூட அடைந்துவிடலாம் சில வருடங்களில்.செய்வாரா ?
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
14-டிச-201917:57:27 IST Report Abuse
Ashanmugam உங்களுக்கு என்ன? சொகுசு பங்களா, கார் என சுகபோக உல்லாச வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஜிஎஸ்டி வரி கொடுமையை பற்றி மக்கள் படும் அவஸ்தை தெரியப்போகுதா அல்லது புரியப்போகுதா?
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
14-டிச-201915:30:46 IST Report Abuse
Ganapathy வரி விதிப்பில் எல்லோரையும் கோமாளிகள் ஆக்குகிறார்கள் . நேற்று ஒரு ஊடகத்தில் பிஜேபி செய்தி தொடர்பாளர் கூறுகிறார், வருமான வரியை குறைத்ததால், பதினைந்து கம்பெனிகள் இந்தியாவிற்கு வர உள்ளது என்கிறார் . ஒரு கம்பெனி தொடங்கி லாபகணக்கு காண்பிப்பதற்கு சில வருடங்கள் பிடிக்கும் .மக்களுக்கு வருமான வரியை குறையுங்கள் என்றல், கம்பெனிகளுக்கு குறைக்கிறார். தொழில் நிறுவனங்கள் லாபத்தில் தன வரி காட்டுகின்றனர் . தனி மனித வரி அப்படி இல்லை . இடஒதிக்கீட்டிற்கு எட்டு லட்சம் வரைக்கும் க்ரீமி லேயர் என்று கூறுகினார்கள் ஆனால் அயிந்து லட்சம் சம்பளம் வங்கியால் அவன் பணக்காரன் .. என்ன கொடும யாரிடம் பொய் சொல்ல, கிஸ்தி குளறுபடியால் முதல் வருட கணக்கே முடிக்க முடியாமல் திணறுகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X