ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், ஷீரடியில், ஒரே ஆண்டில், 88 பேர் மாயமானது குறித்து, தனிப் படை அமைத்து விசாரிக்குமாறு, மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை நீதிமன்றம், போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.






மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள, ஷீரடி நகரில், புகழ் பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது.

இந்நிலையில், மனோஜ்குமார் என்பவர், ஷீரடியில் மாயமான தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு, நீதிபதிகள், டி.வி.நலவாடே மற்றும் எஸ்.எம்.கவானி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:கடந்த, 2018ல், ஷீரடியில், 88 பேர் மாயமாகிஉள்ளனர். பெரும்பான்மை யானோர், சாய்பாபா கோவிலுக்கு வந்தவர்கள்; அவர்களில் மிகச்சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஷீரடியில், ஆள்கடத்தல் அல்லது மாற்று உறுப்புக்காக கடத்தல் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.





எனவே, அகமதுநகர் காவல் துறை கண்காணிப்பாளர், தனிப் படை அமைத்து, கடத்தலில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை, நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-டிச-201909:28:31 IST Report Abuse
Bhaskaran ஜெய மோகன் கதையில் பழனியில் குழந்தைகளை கடத்தி குருடாக்கி Kai கால்களை முடமாகி பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை பற்றி எழுதிய ருப்பார் அதேபோல் அங்கு நடக்கிறதோ
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201913:18:25 IST Report Abuse
நக்கல் என்ன நடக்கிறதென்று போலீஸ் கண்டுபிடிக்கவேண்டும்... அவுரங்கபாட், பேரே சரி இல்லை, முதலில் அதை மாற்றவேண்டும்.... இந்தியாவில் பாட் (..bad) என்று முடிகிற எந்த ஊரும் இருக்கக்கூடாது... அந்த ஊர்களின் பழைய பெயர்களை மீட்டெடுக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-டிச-201916:46:46 IST Report Abuse
Ramesh Rஎது காரணமோ அதை பற்றி பேசாமல் - மத வெறுப்பை காண்பிக்கிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-டிச-201912:07:02 IST Report Abuse
Krishna Very Dangerous Trend Where Is Police Busy Cooking Up Other Cases
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X