பொது செய்தி

தமிழ்நாடு

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி

Added : டிச 14, 2019
Advertisement
பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி

இந்தியாவின் பழமையான விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒன்றாக, சணல் உற்பத்தி விளங்குகிறது. கிழக்கு, வட கிழக்கு மாநிலங்கள், சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன. தேசிய சணல் வாரியம் சார்பில், மயிலாப்பூரில் துவக்கப்பட்டுள்ள சணல் பொருட்கள் கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்திய அளவில், 76 சணல் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றில் இருந்து, ஆண்டு தோறும், 11.28 லட்சம் டன் சணல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழில் சார்ந்து, 1.78 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


துவக்கம்


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சணல் உற்பத்தியை அதிகரிக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்காக, தேசிய சணல் வாரியம், நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சணல் பொருட்கள் கண்காட்சி, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, காமதேனு திருமண மண்டபத்தில் துவக்கிஉள்ளது. தமிழக கைத்தறித்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், கண்காட்சியை துவக்கி வைத்தார். தேசிய சணல் வாரியத்தின் துணை இயக்குனர் அய்யப்பன், தென்னிந்திய சணல் கூட்டமைப்பு செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கண்காட்சியில் தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து, 20 சணல் நிறுவனங்கள், வட மாநிலங்களை சேர்ந்த ஏழு நிறுவனங்கள், 'ஸ்டால்' அமைத்து உள்ளன. இதில், கலைநயம் மிக்க சணல் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.


கைவினைப் பொருட்கள்

குறிப்பாக, பெண்கள் விரும்பும் வகையிலான பல வடிவ கைப்பைகள், கீ செயின், பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்காரத்துக்கான சிறு சிறு கைவினைப் பொருட்கள் உள்ளன. குறைந்த பட்சம், 30 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய் வரை சணல் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.இந்த கண்காட்சி, வரும், 19ம் தேதி வரை நடத்தப்படும். இக்கண்காட்சிக்கு பார்வையாளர்கள் தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X