புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்:தீர்ப்பு தள்ளி வைப்பு

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (16)
Advertisement
 புதுச்சேரி கவர்னர்,அதிகாரம் 'அப்பீல்' , தீர்ப்பு தள்ளிவைப்பு

இந்த செய்தியை கேட்க

சென்னை: புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட முடியாது என்ற உத்தரவை எதிர்த்த, மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கவர்னராக, கிரண்பேடி உள்ளார்.




ஆய்வு கூட்டங்கள்

கவர்னருக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், காங்., - எம்.எல்.ஏ.,வான, கே.லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மனு:தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்கி வந்தாலும், கவர்னர் கிரண்பேடி, அரசை மீறி, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, இணையான அரசு போல் செயல்படுகிறார். அரசின் அன்றாட நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிடுகிறார். இந்நிலையில், கவர்னருக்கு மட்டுமே அதிக அதிகாரங்கள் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம், விளக்கம் வெளியிட்டுள்ளது; இது, சட்டவிரோதமானது. மத்திய அரசின் இந்த விளக்கத்தை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக்கு தான், அரசை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது. சட்டசபைக்கான அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும், கவர்னருக்கு அதிக அதிகாரம் இருப்பது போலும், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகள், ரத்து செய்யப்படுகின்றன. அரசின் அன்றாட நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட முடியாது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

'முதல் பெஞ்ச்'

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசும், கவர்னர் சார்பில், அவரது தனிச் செயலரும், மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.புதுச்சேரி அரசு, மத்திய அரசு மற்றும் கவர்னர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர். இவர்களின் வாதம், நேற்று முடிந்ததை தொடர்ந்து, வழக்கின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல், முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-டிச-201920:15:32 IST Report Abuse
ஆப்பு வழக்கு எப்பிடியோ சுப்ரீம் கோர்ட்டுக்ஜுப் போகப் போகுது. இதுல இவிங்ஜ ஆளாளுக்கு கருத்து சொல்லிட்டுப் போறாங்க.
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
14-டிச-201916:30:09 IST Report Abuse
சமத்துவம் ரெண்டையும் விரட்டி விடுங்க... மக்களாவது நிம்மதியாக இருக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-டிச-201916:24:41 IST Report Abuse
S.Baliah Seer தற்போது உள்ள பிரச்சினை முதல்வர் நாராயணசாமிக்கும் ,துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கும் என்பதை மறந்து விட்டு -மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவருக்கா என்று ஆழ்ந்து சிந்தித்தால் -ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது நிரூபணம் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X