பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, விமான நிலையம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்தது.

செங்கல்பட்டில், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூர் பகுதிகளில் கனமழை பெய்தது

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவரும்பூர், சமயபுரம் டோல்கேட், மணச்சநல்லூர்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

நாகை , வேளாங்கண்ணி, கீழ்வேளூர், ராதாமங்கலம், வெண்மணி, தேவூர், பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், காவேரி நகர், எம்ஜிஆர் நகர், கோட்டை மேடு பகுதிகளிலும்
ஈரோட்டில், பெருந்துறை, பவானி,கோபி , அந்தியூர் பகுதிகளிலும்


தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, வல்லம், சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.






தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X