பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : டிச 14, 2019
Advertisement

விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம்: சங்ககிரி, ஐந்தாவது வார்டு, மேட்டுத்தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, ஆழ்துளை குழாய் கிணறு இல்லை. காவிரி குழாய் மூலம், 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதமாக தண்ணீர் வருவதில்லை. இதனால், விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உடனடியாக குடிநீர் வினியோகிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.மாதேஸ்வரன், சங்ககிரி.

மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் தேவை: மேட்டூர், பொன்னகர் பிரிவில், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை பாதுகாப்புக்கு, சாலையோரம் கட்டிய சுற்றுச்சுவர், மழையால் சேதமானது. மழைக்காலங்களில், மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் புகுவதை தடுக்க, பொன்னகர் சாலையின் ஒரு பகுதியில் மண்ணை கொட்டி, தற்காலிக வேலி அமைத்தனர். மண்மேடு புதர்மண்டி, சாலை குறுகலானதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதனால், மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டுவது அவசியம்.

- சு.சிவக்குமார், பொன்னகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X