பொது செய்தி

இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர் : சிறப்பாக செயல்பட்ட பார்லி.,

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நடந்து முடிந்த பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபா 116 சதவீதமும், ராஜ்யசபா 99 சதவீதம் செயல்பட்டுள்ளது.





பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நவ.,18 ம் தேதி துவங்கி, நேற்று (டிச.,13) நிறைவடைந்தது. கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, "ரேப் இன் இந்தியா" என பேசிய காங்., எம்.பி., ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளிலும் அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. கூட்டத் தொடரின் இறுதி நாளில் அவை செயல்பாடுகள் குறித்த புள்ளி விபரத்தை பார்லி., விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமர்ப்பித்தார்.




இதன்படி, குளிர்கால கூட்டத்தொடரில் லோக்சபா 116 சதவீதமும், ராஜ்யசபா 99 சதவீதமும் செயல்பட்டுள்ளது. லோக்சபாவில் 14 மசோதாக்களும், ராஜ்யசபாவில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராஜ்யசபாவின் 250 வது கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் ஏதும் நடைபெறவில்லை. அதே சமயம், பல விவகாரங்களில் எம்.பி.,கள் ஆக்கபூர்வமாக விவாதித்ததாக ராஜ்யசபா தலைவர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ராஜ்யசபா முதல் முறையாக 100 சதவீதம் செயல்பட்டு, சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் லோக்சபா 108 மணி நேரம், 33 நிமிடங்களும், ராஜ்யசபா 107 மணி நேரம் 11 நிமிடங்கள் செயல்பட்டுள்ளது. மொத்தம் 11 மணி நேரம் 47 நிமிடங்கள் அமளி, குறுக்கீடுகளால் வீணடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
14-டிச-201922:50:34 IST Report Abuse
Dr.C.S.Rangarajan யாமறிந்த மொழிகளிலே என சமஸ்க்ரிதமும், மற்ற மொழிகளிடையே தெரிந்த பாரதியார் தமிழினை உயர்த்தி மொழிந்ததை யாவரும் அறிந்ததைப்போல், மக்களவையில் தமிழக உறுப்பினர் தமிழ் மொழியின் மாண்பினை விளைக்கும்போது சமஸ்க்ரிதத்தில் இல்லையென்றும் தமிழில் 20 பெண் புலவர்கள் வாழ்ந்ததை குறிப்பிட்டார்கள். நானும் இளங்கலை பட்டபடிப்புவரை தமிழையும் இரண்டாம் மொழியாக பயின்றவன். தமிழில் 20 வகுப்புகளில் பெண் புலவர்கள் இருந்ததாக ஏன் பாடபுத்தகங்களிகள் தமிழை வளர்க்கும் முயற்சியாக போதிக்கவில்லை?தமிழை நாமே நன்கு அறியாதபோது,மக்களவையில் ஒரு சிறு குழுவின் முன் தம்பட்டம் அடித்துக்கொள்வதால் பயனென்கொல்?
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக நடந்தது. எதிர்கட்சியினர் பொறுப்பாக நடந்து கொண்டனர். இந்த செய்தியை முற்றிலும் நம்ப வேண்டாம். நிறைவேற்றப்பட்ட மசோதா இந்திய குடியுரிமை சட்டம். மார்கத்தினர் அதை விரும்பவில்லை. அப்படியானால் கட்டாயம் எதிர்க்க வேண்டும். அவர்கள் ஓட்டைத் இழக்கக் கூடாது. அதற்காக அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது விசுவாத்தை பாராளுமன்ற பேச்சு மூலம் அவர்களுக்கு உணர்த்தினார்களே தவிர மக்கள் நலனுக்காக அல்ல. திருந்துவது கடினம்.
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
14-டிச-201914:09:59 IST Report Abuse
A.Gomathinayagam உறுப்பினர்கள் அனைவர்க்கும் வாய்ப்புகள் இரு சபை தலைவர்களால் கொடுக்கபடுவதாலும்,உறுப்பினர் களும் பொறுப்பு உணர்ந்து செயல் படுவதாலும் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X