ராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம்

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (112)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : 'மேக் இன் இந்தியா' என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் 'ரேப் இன் இந்தியா' என்ற நிலை உருவாகி வருவதாக ஜார்கண்ட் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., எம்.பி.,யான ராகுல் பேசியதற்கு எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.






ராகுலின் இந்த பேச்சை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் பார்லி.,யின் இரு அவைகளிலும் பா.ஜ., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என ராகுல் தெரிவித்திருந்தார். ஆனால் ராகுலின் பேச்சு தொடர்பாக தேர்தல் கமிஷனில், பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, புகார் அளித்துள்ளார். ம.பி.,யில் போபால் சிறப்பு கோர்ட்டில் ராகுல் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக எம்எல்ஏ - எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது.


தலைவர்கள் கருத்து :


ஸ்மிருதி இரானி : இந்திய பெண்கள் குறித்து தலைவர் ஒருவர் இழிவாக பேசுவது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை. இது தான் ராகுல் மக்களுக்கு சொல்லும் செய்தியா? அவர் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ராகுல் தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்.

நிர்மலா சீதாராமன் : நாம் பெண்களின் கண்ணியத்தை பற்றியே பேச வேண்டும். காங்.,ன் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு பேசி உள்ளது மிகவும் வெட்கக் கேடானது. பெண்களின் கண்ணியத்தை மறந்து அவர் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது.





ராஜ்நாத் சிங் : பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தின் பெருமைகளை விளக்கி வருகிறார். அதனால் பல இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் சிலர் இது போன்ற பேசுவது ஒட்டுமொத்த நாட்டையும் காயப்படுத்தி உள்ளது. இவர் போன்றவர்களை பார்லி.,க்கு மக்கள் தேர்வு செய்யக் கூடாது.

திமுக கனிமொழி : பிரதமர் எப்போதும் மேக் இன் இந்தியா பற்றி பேசுகிறார். அந்த திட்டத்தால் இந்தியா வளம் பெறும் என்கிறார். நாங்களும் அதை மதிக்கிறோம். ஆனால் இந்தியாவில் நிலை மாறி உள்ளதையே ராகுல் கூறி உள்ளார்.மேக் இன் இந்தியாவால் ஒன்றும் நடக்கவில்லை. அதே சமயம், பலாத்காரங்கள் தான் நடக்கிறது. இதை தான் ராகுல் கூறி உள்ளார்.

அமைச்சர் பிரலஹாத் ஜோஷி கூறுகையில், ராகுல், அவரது பேச்சின் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றார்.

ஆம்ஆத்மி சஞ்சய் சிங் : இது போன்ற பேச்சுக்களை நான் ஆதரிக்க மாட்டேன். பலாத்காரம் என்ற வார்த்தையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. டில்லி, பலாத்கார தலைநகராக மாறி வருகிறது என்ற பிரதமரின் வார்த்தைகளையும் கண்டிக்கிறேன். பொது வெளியில் யாரும் இது போன்று பேசக் கூடாது. பா.ஜ.,வும் காங்.,ம் பிரச்னைகளுக்கு தீர்வ காணாமல், பலாத்கார சம்பவங்களை அரசியல் ஆக்குகின்றன.

மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவல் : ராகுலின் பேச்சு கண்டனத்திற்குரியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
15-டிச-201913:18:28 IST Report Abuse
MIRROR ராகுலின் பேச்சு கண்டிப்புக்கு உரியதல்ல. சிந்திப்பதற்கு உரியது. சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான நிலையை போக்க குரல் கொடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
15-டிச-201902:38:52 IST Report Abuse
ashak கற்பழிப்பின் நகரம் டெல்லி என்று 2014 ல் மோடி கூவினார் அப்ப எல்லோருக்கும் இனித்தது, வெக்கம் கெட்டவர்கள்
Rate this:
Share this comment
Cancel
15-டிச-201901:50:54 IST Report Abuse
Ganesan Madurai ஒண்ணரை லட்சம் தமிழர்களை கொலை செய்த பெயிலு பப்பூ. இவனுக்கு திருட்டு திராவிட இடதுசாரி கபோதி கான்கிரஸ் பாவாடை குல்லா கூட்டணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X