அசாமில் கட்டுப்பாடுகள் தளர்வு

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (9)
Advertisement
cab, assam, curfew,CABPolitics, megalaya, bengal, banth, bihar, குடியுரிமை மசோதா,  போராட்டம், அசாம், கட்டுப்பாடுகள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடந்த அசாமில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மே.வங்கத்தில் போராட்டம் நடக்கிறது.


அசாம்

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக அசாமில் நடந்த போராட்டம் காரணமாக, இணைய சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடையை மீறி நடந்த போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவுகாத்தியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், திஸ்புர், உசான் பஜார், சந்மரி, சிப்புகுரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர். திப்ருகர்க் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பிராட்பேண்ட் சேவைகளும் துவக்கப்பட்டுள்ளது. அசாமில், பாதுகாப்பு பணியில் 26 ராணுவ குழுக்கள் உள்ளனர்.


பந்த்


குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு 6 மணி நேர பந்திற்கு, நாகா மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பந்த் வெற்றிகரமாக நடக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, அசாம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் உள்ள தங்களது அமைப்பு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தேர்வு, சுகாதார பணியாளர்கள், மீடியா ஊழியர்கள், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மட்டும், இந்த பந்தில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


போராட்டம் வாபஸ்

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக அகில அசாம் மாணவர் சங்கத்தினர் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவி, வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தங்களது போராட்டத்தை திருமப பெற்று கொள்வதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


வன்முறை
Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில், இந்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பராகன்ஸ், ஹவுராவில் சில இடங்களில் வன்முறை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பீஹாரில்...


குடியுரிமை மசோதாவிற்கு எதிராக வரும் , பீஹாரில், 21ம் தேதி பந்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயகத்தினர் மீது நம்பிக்கை உள்ளவர்கள், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளது.


மேகாலயா
மேகாலயா மாநிலத்தில் நடக்கும் போராட்டம் காரணமாக ஷில்லாங் நகரில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


போலீசார் காயம்
டில்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலையில், குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் 12 போலீசார் காயமடைந்தனர். இரண்டு பேர் பலத்த காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ராணுவம் அறிவுரை


இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அத்துமீறுவதாகவும், பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவியது.இதனை மறுத்துள்ள இந்திய ராணுவம், டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், சமூக வலைதளங்களில், இந்திய ராணுவம் குறித்து பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-டிச-201900:11:38 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren This is wake up call for those Hindus who still sleeping and in the fake denial of the foreign religion atrocities, and the betrayal of Mohandas Gandhi, are now those foreign religion people dont allow us take care of our Hindus who suffering in their countries. wake up now.
Rate this:
Share this comment
Cancel
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201919:28:22 IST Report Abuse
MANITHAN 😱😱😱 உண்மையாகவா?
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
14-டிச-201917:28:31 IST Report Abuse
kumzi மும்தா பேகத்தை பிச்சைக்கார பங்காளதேசத்துக்கு நாடுகடத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X