பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை; தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று(டிச.,14) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தமிழகம், கேரளா எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


இடம்: சென்னை

இடம்: சென்னை




கடந்த 24 மணி நேரத்தில். கடலூர், நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தலா 8 செ.மீ., குடவாசல், மணிமுத்தாறில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.அக்.,1 முதல் இன்று வரை 43 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவை விட 5 சதவீதம் அதிகம்.



புதுச்சேரியில் 28 %, வேலூரில் 28 % பெரம்பலூரில் 24 %, மதுரையில் 23%, திருவண்ணாமலையில் 21 % சென்னையில் 13 % அளவு குறைவாக மழை பதிவாகியுள்ளது.வரும், 20, 21 தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X