பொது செய்தி

இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (56)
Advertisement
வடகிழக்கு மாநிலங்கள், இந்தியா, குடியுரிமை மசோதா, இங்கிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா,,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த பகுதிகளுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்களை கேட்டு கொண்டுள்ளன.

இது தொடர்பாக இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை மசோதாவிற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. முக்கியமாக, வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுராவில் வன்முறை இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாமில் 10 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படலாம். கட்டாயம் பயணம் செய்ய வேண்டிய தேவை இருந்தால், சாத்தியமான பயணிகள் சமீபத்திய தகவல்களுக்கு உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.




இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடப்பதால் அங்கு செல்லும் அமெரிக்க இங்கிலாந்து பிரஜைகள் எச்சரிக்கையாக இருக்குமாறு இரு நாடுகளு எச்சரித்துள்ளன.


அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் பின்னணியில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அசாமிற்கான அதிகாரப்பூர்வ பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறும் கூறியுள்ளது.

இதேபோல், பிரான்ஸ், இஸ்ரேல் அரசுகளும், தனது நாட்டு குடிமக்களை கவனமுடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-டிச-201919:25:32 IST Report Abuse
Sampath Kumar இந்தா உலக தாதாக்கள் சொல்லிவிட்டர்கள் இந்தியா என்ன செய்ய போகிறது ?? அரசியில் சித்து விலை யாட்டு ஆரம்பம் அப்பாவி மக்கள் அம்போ ???????//
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-டிச-201910:51:52 IST Report Abuse
Malick Raja மனிதர்களாக கருத்துக்கள் கூறுவதே மனித மாண்பு நிலையற்றவாழ்வை நினையாமல் தான்தோன்றித்தனமாக கருத்துக்கள் கூறுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டதே ..சில நொடிகள் போதும் மனிதன் உருக்குலைய .. என்பதை உணரா அறிவிலிக்கூட்டத்திற்கு எதை சொன்னாலும் எடுபடாது அது அவன் முடியும்வரை ..கால நேரம் .. காலத்தின் அளவு யாருக்கும் குறிக்கப்படாமலே முடியவேண்டும் .. உணர்வோர் மனிதர்களாக மட்டுமே இருக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-டிச-201908:47:03 IST Report Abuse
mindum vasantham இது யாரு செய்யுற வந்தேறி கலவரம் என்று எல்லாருக்கும் தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X