மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (90)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ' ரேப் இன் இந்தியா' எனக்கூறிய விவகாரத்தில் உண்மையை தான் பேசினேன். மரணமடைவேனே தவிர மன்னிப்பு கேட்க மாட்டேன். காங்கிரசிலிருந்து யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

மத்திய அரசை கண்டித்து டில்லியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. சோனியா, ,ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மத்திய அரசை கண்டித்து டில்லியில், காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி.,ராகுல், பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


உண்மையை பேசினேன்


இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நான் பேசிய பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என நேற்று பார்லிமென்டில் பா.ஜ., கூறி வருகிறது. சரியானதை கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என , என்னை மன்னிப்பு கேட்க சொல்கின்றனர். எனது பெயர் ராகுல் சவார்கார் இல்லை. ராகுல் காந்தி. உண்மை பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். காங்கிரசிலிருந்து யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். மரணமடைவேனே தவிர மன்னிப்பு கேட்க மாட்டேன். மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை உங்களிடம் நான் கூறுகிறேன்.

இன்று ஜிடிபி 4 சதவீதமாக உள்ளது. ஜிடிபி கணக்கிடும் முறையை மாற்றிய பிறகும் அது குறைவாக உள்ளது. ரூபாய் நோட்டு வாபசால், இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது இன்று வரை மீளவில்லை. இது கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டம் என நீங்கள் பொய் சொன்னீர்கள். முந்தைய முறையில் கணக்கிட்டால் ஜிடிபி 2.5 சதவீதத்தை தாண்டாது.

நாட்டின் இன்றைய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மத ரீதியில் பிரிக்க முயற்சி நடக்கிறது. அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து,அருணாச்சல பிரதேசம் செல்ல வேண்டும். அங்கு மோடி என்ன செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். அந்த பகுதி முழுவதும் பற்றி எரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


விவாதம் இல்லை

Advertisement


காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது: மத்திய அரசு விரும்பும் போது எல்லாம் சட்டத்தை அமல்படுத்துவதும், திரும்ப பெறுவதும், மாநிலத்தின் தன்மையை மாற்றும் சூழல்தான் இன்று உள்ளது. அவர்கள் விம்பும் போது ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெற்று கொள்வதுடன், விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றுகிறார்கள். குடியுரிமை மசோதா, இந்தியாவின் ஆன்மாவை பாதிக்கும் என்பதை மோடியும் அமித்ஷாவும் கவலைப்படவில்லை. அசாம் மற்ற வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடப்பதை போல் நினைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


பொய் வாக்குறுதி


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: 2024க்குள் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதிமொழி அளித்தது. ஆனால், இவை பொய்யான வாக்குறுதி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டு மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தெரியவில்லை


சிதம்பரம் பேசுகையில், 6 மாதத்தில், இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு உடைத்துவிட்டது. என்ன செய்வது என அமைச்சர்களுக்கு தெரியவில்லை. ஆனால், நிதியமைச்சர், அனைத்தும் சரியாக உள்ளது. உலகின் பெரிய பொருளாதாரத்தில் நாமும் உள்ளோம் எனக்கூறி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு


பிரியங்கா பேசுகையில், நாட்டை நேசிப்பதாக இருந்தால், உங்கள் குரலை உயர்த்துங்கள். நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால், அரசியலமைப்பு அழிக்கப்படும். பா.ஜ.,வின் பிடிவாதம் மற்றும் பொய் தலைவர்கள் காரணமாக நாம் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
14-டிச-201922:20:40 IST Report Abuse
M S RAGHUNATHAN ராகுல் காந்திக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன சம்பந்தம் என்று காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பகிரங்கமாக கூறட்டும். சாவர்க்கர் பற்றி ராகுலுக்கு என்ன தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201922:01:36 IST Report Abuse
Ganesan Madurai ஒண்ணரை லட்சம் தமிழர்களை துடிக்க துடிக்க கொலை செய்த கொலைகார காமுகன் பெயில் பப்பூவிற்கு நோண்டவகோனனும் ராசவேலு என்ற தமிழ் பொறுக்கிகள் ஆதரவு. தமிழர்களை கொலை செய்த பெயிலு பப்பூ வுக்கு ஆதரவாக கருத்து எழுதும் இவனுக உடலில் ஓடுவது தவிழனின் ரத்தம் இல்லை என்து உறுதி.
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201921:46:55 IST Report Abuse
tasmac tamilan appo unga appa voda thatha nerhu illaya
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X