பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை

Added : டிச 14, 2019
Advertisement
சிறுத்தை, வனத்துறை, ஊட்டி, முதுமலை, தெப்பக்காடு,

ஊட்டி: முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் சாலையோரத்திற்கு வருகின்றன.

இந்நிலையில், தெப்பக்காடு சாலையில், ரோட்டோரத்தில் இருந்து 100 மீ., தூரத்தில் உள்ள மரம் ஒன்றில் சிறுத்தை ஒன்று ஒய்வெடுத்து கொண்டிருந்தது. இதனை பார்த்த, சுற்றுலா பயணிகளும், அந்த வழியாக சென்றவர்களும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு மொபைலில் படம் எடுக்க முயற்சித்தனர். சிலர் காட்டிற்குள் செல்லவும் முயன்றனர். ஆனால், தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், அவர்களை தடுத்துநிறுத்தி அனுப்பி வைத்தனர்.

சாலையோரங்களில் இருக்கும் விலங்குகளை பார்த்து வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கக்கூடாது. அவற்றை போட்டோ எடுக்க முயற்சிக்கக்கூடாது. மீறினால், வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X