பொது செய்தி

இந்தியா

ராமர் கோவிலுக்கு நன்கொடை: யோகி வேண்டுகோள்

Updated : டிச 15, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (51)
Advertisement

கிரிடிஹ்: ''அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, ஒவ்வொரு குடும்பமும், ஒரு செங்கல் மற்றும் 11 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும்,'' என, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமை யில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 81 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், நாளை நான்காம் கட்டமாக, 15 தொகுதிகளுக்கு, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி, கிரிடிஹ் மாவட்டத்தில், யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. அதன் கட்டுமான பணிகளுக்காக, ஜார்க்கண்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், தலா, ஒரு செங்கல் மற்றும் 11 ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.

சமுதாயத்தின் நன்கொடையில் தான், 'ராம ராஜ்யம்' நடைபெற வேண்டும். ராம ராஜ்யத்தில், நாட்டின் வளர்ச்சிப் பயன்கள், எவ்வித பாகுபாடின்றி, இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் சென்றடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'அயோத்தியில், 2.77 ஏக்கர் பரப்பில், ராமர் கோவில் கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம், நவ., 9ல் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், மசூதி கட்ட, 5 ஏக்கர் நிலத்தை, உ.பி., சன்னி மத்திய வக்ப் வாரியத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, அயோத்தி வழக்கை சீராய்வு செய்யக் கோரி, 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை, நேற்று முன்தினம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி, தடையேதுமின்றி துவங்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
15-டிச-201914:12:46 IST Report Abuse
Narayan மக்களே நேரடியாக பணம் கொடுப்பது நல்லது என்றாலும், பல ஆயிரம் கோடி கோவில் வருமானத்தை எந்த வித கணக்கும் காட்டாமல் ஆட்டை போடும் அரசியல் சாசனம், ஒரு சில நூறு கோடி இந்த கோவிலுக்காக அரசே கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivas - Chennai,இந்தியா
15-டிச-201911:39:54 IST Report Abuse
Srinivas உண்மையான இந்துக்களே...அனைவரும் தங்களால் முடிந்த பண உதவி செய்து ஸ்ரீ ராமன் அருளை, ஆசீர்வாதத்தை பெறுங்கள். உலகளாவிய மிகப்பெரும் கோயிலாக ஸ்ரீ ராமன் கோயில் அமைய உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் ஆரம்பம் முதலே திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ரயில், விமான வசதியும் அமைத்து தரப்படவேண்டும். ஓம் ஜெய் ஸ்ரீ ராம்...
Rate this:
Share this comment
cbonf - doha,கத்தார்
15-டிச-201914:00:16 IST Report Abuse
cbonfராமர் கோயில் கட்ட யார் தான் பணம் அனுப்ப தயங்குவார்கள்? எந்த வங்கி கணக்கு மற்றும் செங்கல் அனுப்ப வேண்டிய முகவரியை வெளியிட்டால் 100 க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்ட பணம் வந்து குமியும்...
Rate this:
Share this comment
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-201910:12:34 IST Report Abuse
ganesh True Hindu will give money without asking as we Hindu faced many hurdles and overcoming with blessing of Lord ram, this also we will immensely construct by his grace
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X