பொது செய்தி

தமிழ்நாடு

மண்ணை கவ்வ' காத்திருக்கும் கட்டடம் போலீஸ் குடியிருப்புவாசிகள் அச்சம்

Added : டிச 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
மண்ணை கவ்வ' காத்திருக்கும் கட்டடம்  போலீஸ் குடியிருப்புவாசிகள் அச்சம்

கோவை: கோவை உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்புகள், சிதிலமடைந்த நிலையில் உள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை, மேட்டுப்பாளையம் நடூரில், ஓட்டு வீடுகள் மீது சுவர் இடிந்து, 17 பேர் பலியான சம்பவத்துக்கு பின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆட்டம் கண்டு வரும் குடியிருப்புகளின் நிலை குறித்து, அரசு அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்பு வளாகம், அபாயகரமான நிலையில் உள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில், போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பு வளாகத்தில், சில ஆண்டுகளுக்கு முன், சமுதாயக்கூடம், கூடுதலாக குடியிருப்புகள், புதிதாக கட்டப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளின் நிலை தான், இன்று கவலைக்கிடமாக உள்ளது. உடைந்த ஜன்னல், சுவர்கள், பெயர்ந்து விழும் சுவர் பூச்சுகள், சுவர்களில் செடிகள் என, குடியிருப்புகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.குடியிருப்புவாசிகள் கூறுகையில், 'அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்' என்றனர்.தலைமையிடத்து துணை கமிஷ்னர் செல்வகுமார் கூறுகையில், ''பழைய மோசமான குடியிருப்பில், யாரும் தங்க அனுமதிக்கப்படவில்லை. மற்றபடி, புதிய குடியிருப்புகள் கட்டவும், பராமரிப்பு பணிகளுக்காகவும், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், ஒப்புதல் கிடைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-டிச-201910:45:44 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னை மாம்பலம் காவல்நிலையம் பின்புறம் சமீபத்தில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்பு மாடியில் அரசமர கன்றுகள் தெரிகின்றன. அதை அங்கு குடியிருக்கும் குடும்பமே அகற்றாமல் பத்தாண்டுகள் கழித்து இதேபோல புலம்புவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X