பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் களம் காண காளைகள் ரெடி

Added : டிச 14, 2019
Advertisement
 ஜல்லிக்கட்டில் களம் காண காளைகள் ரெடி

அலங்காநல்லுார்: உலகப்புகழ் பெற்ற, மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாவிற்காக, ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

காளைகளுக்கு, சிறப்பு பயிற்சிகளை, அதன் உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர்.உலகப்புகழ் மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாவை, ஜன., 17ல் கோலாகலமாக நடத்த, ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆடுகளத்தில் கட்டிளங் காளையர்களை பாய்ந்து பந்தாட, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல், நடை, மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை, மாடு வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.

மழை பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் இன்புற்று வாழ வேண்டும் என, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. மதுரையில், ஜன., 15 பொங்கலன்று, அவனியாபுரம்; 16ல், பாலமேடு; 17ல், அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கவுள்ளன. ஜல்லிக்கட்டு நடக்கவுள்ள தேதியை, விழாக்குழு முறைப்படி பின்னர் அறிவிக்கும்.
கடந்த, 2017ல் நடந்த ஜல்லிக்கட்டில், வலது தோளில், காளை குத்தியது. இதனால் மூட்டு ஜவ்வு கிழிந்தது; அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். 45 நாட்கள் ஓய்வுக்கு பின், மீண்டும் காளையை பிடித்து வருகிறேன். பல்வேறு இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று, காளைகளை பிடித்து வருகிறேன். அதில் பெருமை இருக்கிறது.
தங்கப்பாண்டிமாடுபிடி வீரர், அலங்காநல்லுார்

இரண்டு பற்கள் முளைத்த காளைகள், ஜல்லிக்கட்டுக்கு விடப்படும். நான்கு பற்கள், ஆறு பற்கள், எட்டு பற்கள் வரை, காளைகள் களத்தில் நின்று விளையாடும். வீரர்களிடம் பிடிபடும் காளையை வைத்து கொள்ள மாட்டோம்; அனுப்பி விடுவோம். காளைக்கு உளுந்து துாசி, வெள்ளை துவரை, பச்சைப்புல், வைக்கோல் உள்ளிட்டவற்றை, உணவாக வழங்குகிறோம். பாண்டி காளை உரிமையாளர், செல்லுார்முத்தாலம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. உழவுப்பணி, நாட்டு மாட்டின இனப்பெருக்கம், இயற்கை உரம் உள்ளிட்ட காரணங்களுக்காக, நாட்டு மாடுகளை வளர்க்கிறோம்
கோவிந்தராஜன்காளை உரிமையாளர், அலங்காநல்லுார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X