பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் பெறாதீர்: பல்லடத்தில் புதுமை போஸ்டர்!

Added : டிச 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 ஓட்டுக்கு பணம் பெறாதீர்: பல்லடத்தில் புதுமை போஸ்டர்!

பல்லடம்: 'பன்றி விலையை விட, தேர்தலில், மக்களின் ஓட்டுக்கு விலை குறைவு' என்பதை உணர்த்தும் வகையில், உள்ளாட்சி தேர்தலில் பணம் வாங்கி ஓட்டு போடுவதற்கு எதிரான விழிப்புணர்வு போஸ்டர்கள், பல்லடம் அருகே ஒட்டப்பட்டுள்ளன.

சமீப காலமாக, தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குவது அதிகரித்து வருகிறது. வாக்காளர்களும், இதை ஆர்வத்துடன் பெற்றுக்கொள்வதால், தேர்தல் ஆணைய விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன.தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க, கட்சிகள் திட்டம் வகுத்துள்ளன.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், 'எருமை மாடு, 50 ஆயிரம் ரூபாய், பசு மாடு 40 ஆயிரம், ஆடு 10 ஆயிரம், நாய் 25 ஆயிரம், பன்றி 3,000 ரூபாய்... ஆனால், தேர்தலில் மக்களின் விலை 500 முதல் 1,000 ரூபாய் வரை உள்ளது.'இது, பன்றியின் விலையை விடக் குறைவு. சிந்தித்து பணம் பெறாமல், தன்மானத்துடன் வாக்களியுங்கள்' என்று கூறப்பட்டு உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, இதே போன்ற கருத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.'பன்றி விலையை விட, தேர்தலில், மக்களின் ஓட்டுக்கு விலை குறைவு' என்பதை உணர்த்தும் வகையில், உள்ளாட்சி தேர்தலில் பணம் வாங்கி ஓட்டுப்போடுவதற்கு எதிரான விழிப்புணர்வு போஸ்டர்கள், பல்லடம் அருகே ஒட்டப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Chennai,இந்தியா
20-டிச-201915:21:34 IST Report Abuse
Baskar மனிதனுக்கு விலைய நிர்ணயிக்க யாராலும் முடியாது, அதனால் இப்படி ஒரு விலை பட்டியல் இன்னும் எதிர்பார்பதுபோல் உள்ளது. இது சரியல்ல.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-டிச-201917:49:10 IST Report Abuse
Malick Raja போதையில் இருக்கும்போது இத்தெளலாமா எடுபடும் .. முதலில் போதைக்குண்டான டாஸ்மாக்கை அடைத்து விட்டு இதுபோன்ற அறிவிப்புகள் வைப்பதே சரியாகும் ..
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15-டிச-201906:06:36 IST Report Abuse
 nicolethomson எவ்ளோ சொன்னாலும் திருந்தாத மனிதப்பிறவிகளுக்கு டிவி சீரியல்கள் போதும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X