பொது செய்தி

தமிழ்நாடு

காத்திருக்கும் சிறுத்தை சுற்றுலா பயணியரே உஷார்!

Added : டிச 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 காத்திருக்கும் சிறுத்தை சுற்றுலா பயணியரே உஷார்!

கூடலூர்: முதுமலை சாலையோரங்களில், சிறுத்தைகள் உலா வருகின்றன; எனவே, சுற்றுலா பயணியர், கவனமாக செல்ல, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்ப கத்தில் பருவமழையை தொடர்ந்து, தற்போது மிதமான காலநிலை ஏற்பட்டுள்ளதால், தெப்பக்காடு - -கக்கனல்லா சாலையோரங்களில், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.தெப்பக்காடு அருகே, நேற்று காலை, சாலையில் இருந்து, 100 மீ.,யில் இருந்த மரத்தில், சிறுத்தை ஒன்று, 'ஹாயாக' ஓய்வெடுத்தது.சுற்றுலா பயணியர் சிலர், அங்கு வாகனங்களை நிறுத்தி, சாலையில் நின்று ரசித்தனர். சிலர், வனப்பகுதிக்குள் சென்று, 'போட்டோ' எடுக்க முயன்றனர்.வன ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று, சிறுத்தைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்துக்கு பின், சிறுத்தை அங்கிருந்து சென்றது.விலங்குகள் நடமாட்டம்மிதமான காலநிலை காரணமாக யானை,காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணியர்,வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்ப்பது, வனப்பகுதிக்குள் செல்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது, நடவடிக்கைஎடுக்கப்படும்.முதுமலை வனத்துறையினர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
15-டிச-201907:25:53 IST Report Abuse
mindum vasantham muthumalai முக்கிய பாதுகாக்க பட்ட வன பகுதி அங்கே கூட சிறுத்தை நடமாடவில்லை என்றால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X