சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லால் அடித்து கொடூரனை கொன்ற மக்கள்: மூதாட்டியை கொன்றதால் மக்கள் ஆவேசம்

Added : டிச 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 கல்லால் அடித்து கொடூரனை கொன்ற மக்கள்: மூதாட்டியை கொன்றதால் மக்கள் ஆவேசம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கள்ளக்காதலியின் மகள் மீது ஏற்பட்ட மோகத்தால், 'ஆசிட்' ஊற்றி மூதாட்டியை கொன்றவனை, கல்லால் அடித்து, மக்கள் கொலை செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, குருசாமிபாளையம் பிள்ளாநல்லுார் தோப்புக்காட்டைச் சேர்ந்தவர் தனம், 65. இவரது கணவர் கந்தசாமி, இறந்துவிட்டார்.இவருக்கு, மூன்று மகன்கள். முதல் மகன் ரவிகுமார், 10 ஆண்டுகளுக்கு முன், விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி விஜயா, 45, பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.தர்மபுரி மாவட்டம், தடங்கம் அவ்வை நகரைச் சேர்ந்தவர், சாமுவேல், 41; ரவுடி. இவருக்கும், விஜயாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.விஜயாவின், முதல் மகள் திருமணமாகி சென்றுவிட்டார். 19 வயதான இரண்டாவது மகள், தாயுடன் இருக்க விருப்பமின்றி, பாட்டியுடன் வசித்தபடி, ராசிபுரத்திலுள்ள கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். உள்ளூரில் உள்ள ஒரு கடையிலும், பகுதி நேரமாக பணி புரிந்து வருகிறார்.இந்நிலையில், இரண்டாவது மகளை, தனக்கு திருமணம் செய்து தரக்கோரி, பாட்டி தனத்தை, சாமுவேல் தொந்தரவு செய்யத் துவங்கினார்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், தனத்தின் வீட்டிற்கு, 5 லி., ஆசிட் கேனுடன் சென்ற சாமுவேல், 'பேத்தியை அழைத்துச் செல்ல வந்தேன்' எனக் கூறியுள்ளார். இதனால் தனம், தன் பேத்திக்கு போன் செய்து, கடையிலேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல், தனத்தை, கத்தியால் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, கதவை தட்டினர். ஆனால் சாமுவேல், தான் எடுத்துச் சென்ற ஆசிட்டை, தனம் மீது ஊற்றி, கொலை செய்தார்.இதையடுத்து, அப்பகுதி மக்கள், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.எஸ்.எஸ்.ஐ., முருகானந்தம் உட்பட இரு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, கதவை திறக்க முயன்றனர். அவர்கள் மீதும், சாமுவேல், ஆசிட்டை ஊற்றி னார். இதில், மூன்று பேரும் படுகாயமடைந்தனர். மேலும், அருகிலிருந்த மக்களுக்கும் காயம் ஏற்பட்டது.நிலைமை தீவிரமாகவே, இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்து, வீட்டை சுற்றி வளைத்தனர்.சாமுவேல், வீட்டில் இருந்து வெளியே வந்து, போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது, ஆசிட்டை ஊற்ற ஆரம்பித்தார்.இதையடுத்து, நள்ளிரவு, 1:00 மணியளவில், ஆசிட்டுடன் இருந்த சாமுவேலை, அப்பகுதி மக்கள், சரமாரியாக கல்லால் தாக்கத் துவங்கினர். அதில், பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தனம் மற்றும் சாமுவேல் சடலத்தை கைப்பற்றிய போலீசார், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர். ஆசிட் வீசியதில் காயமடைந்த போலீசார், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவர், மேல்சிகிச்சைக்கு கோவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சாமுவேலுக்கு, ஆசிட் எப்படி கிடைத்தது என்பது குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.துப்பாக்கி வேலை செய்யவில்லைமூதாட்டி தனத்தை கொலை செய்து தப்பியோட முயன்ற சாமுவேலை, பொதுமக்களும், போலீசாரும் துரத்தினர்.

அப்போது சாமுவேல் தாக்கியதால், போலீசார், அவரை துப்பாக்கியால் சுட முயன்றனர். துப்பாக்கி குண்டு, 'லாக்' ஆகி விட்டதால், அவர் மீது குண்டு பாயவில்லை. தொடர்ந்து ஓடியவர், 'சிமென்ட்' தரையில் விழுந்ததால், பின் தலையில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.அருளரசு, நாமக்கல் எஸ்.பி.,

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
17-டிச-201916:33:07 IST Report Abuse
Sathya Dhara உடனே சாமு வேலுக்கு பரிந்து கொண்டு....பாவாடைகளும் மனித உரிமை ஆணையமும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடும். ஜாக்கிரதையாக இருங்கள். காலம் கெட்டுக்கிடக்கிறது.....
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
17-டிச-201910:43:08 IST Report Abuse
நக்கீரன் சபாஷ்... தப்பென்று தெரிந்தால் உடனே தண்டனை வழங்கும் பழக்கம் மக்களுக்கு வந்திருக்கிறது. இது தொடர வேண்டும். இனியும் இந்த கேடுகெட்ட சட்டத்தையும், நீதியில்லாத "நிதி" துறையும், அரசியல் கொள்ளை கூட்டங்களையும் நம்பி பலனில்லை என்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு என்றைக்கு இதே போல் தண்டனையை தரப்போகிறீர்கள் மக்களே?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-டிச-201906:24:56 IST Report Abuse
 nicolethomson ஒவ்வொரு ரவுடியும் வளருவது அந்த பகுதி பொலிஸாராலேயே , முளையிலே கிள்ளியிருந்தா இப்படி திமிரோடு வளர்ந்திருக்கவே மாட்டான் , கண்டும் காணாமல் விட்ட காவல்துறையினர் என்ன பதில் சொல்லுவாங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X