சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கூட்டணி தர்மத்துக்காக, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, கட்டாயம் ஆதரித்து தான் ஆக வேண்டும். அதே நேரம், ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி, அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே, எங்கள் நிலைப்பாடு. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக, பார்லி.,யில் நாங்கள் அளித்த ஓட்டு, ஈழத் தமிழர்களுக்கு
எதிரானவை இல்லை.'டவுட்' தனபாலு: உங்களின் இன்றைய அரசியல் நிலைமை, பேட்டியில் தெளிவாக தெரிகிறது. கூட்டணிக்காக, சற்று விட்டுக் கொடுத்தல் அவசியம் தான் என, நீங்கள் கூறுவதன் மூலம், தமிழகத்தில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுடனான
உங்களின் கூட்டணிக்கு, சிக்கல் வராமல் பார்த்துக் கொண்டுள்ளீர்கள் என்பதில் யாருக்கும், 'டவுட்'டே இருக்காது!பத்திரிகை செய்தி: 'பல கோடி ரூபாய் மோசடி வழக்கில், மத்திய அரசால் கைது செய்யப்பட்டு, 100 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 'சுதந்திர போராட்ட வீரர், வ.உ.சி., முன்னாள் முதல்வர் காமராஜர் போல, என்னையும் சிறையில் அடைத்தனர்' என கூறி, அவர்களின் தியாகத்தை களங்கப்படுத்தி
விட்டார்' என, சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.'டவுட்' தனபாலு: அத்துமீறல், ஊழல் போன்ற பல காரணங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்த பல அரசியல் தலைவர்கள், சிதம்பரம் போலத் தான், பெருமையாகவும், கவுரவமாகவும் பேசிக் கொள்கின்றனர். கருணாநிதி துவங்கி, ஜெ., வரை இந்த நிலை தமிழகத்தில், நீண்ட காலமாக நிலவுவதை, நீங்கள் அறிவதில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மலேஷிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு, கருணாநிதி எப்படி பக்கபலமாக இருந்தாரோ, அவர் வழியில், நானும் என்றைக்கும், மலேஷிய தமிழர்களுக்கு பக்கபலமாக இருப்பேன். உங்களுக்கு ஏற்படக்கூடிய, எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கு முதல் குரல் கொடுக்கும் கட்சியாக, தி.மு.க., இருக்கும்.

'டவுட்' தனபாலு: நடிகர் வடிவேலு பாணியில், 'உங்களையெல்லாம் பாக்க, பாவமா இருக்கு.. போங்க, போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்க...' என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், தமிழகத்தின் பிரச்னைகள், தமிழர்களின் தலையாய தேவைகள் பலவற்றை, காலம்
காலமாக நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், ஸ்டாலின் அளித்துள்ள, மலேஷிய தமிழர் பாதுகாப்பு உறுதி, அதை படிப்போருக்கு சிரிப்பை வரவழைக்கும் என்பது, 'டவுட்'டே இல்லாமல் தெரிகிறது!

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: மத்திய அரசின் குடியுரிமை சட்டம், இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை, எங்களது போராட்டம் தொடரும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தை பொறுத்தவரை, அரசியல் தலைவர் என்ற அந்தஸ்தை
பெறுவதற்கு, இத்தனை போராட்டங்கள் நடத்த வேண்டும்; இத்தனை முறை சிறை சென்றிருக்க வேண்டும்; இத்தனை அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற, 'விதி' உள்ளதோ?

இளைஞரணி தலைவராக முடி சூட்டப்பட்டுள்ள நீங்கள், தொடர்ந்து பல கைதுகளை சந்திக்க தயாராக இருப்பது, உங்களின் பேட்டியில், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது.

நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன்: ஏழை குழந்தைகள் மற்றும் உதவிகள் தேவைப்படும் பலருக்கு, ரஜினி பிறந்த நாளில் நல உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள், மக்கள் மன்றத்தின் மூலம் நடந்து கொண்டிருக்கின்றன. ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருகிறார்; அதை, அடுத்த ஆண்டு அறிவிப்பார்.

'டவுட்' தனபாலு: நீங்களும் ஒவ்வொரு முறை தமிழகம் வந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும்போதும், உங்கள் அன்புத்தம்பி, நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை, பல ஆண்டுகளாக கூறி வருகிறீர்கள்; இப்போது, 'அடுத்த ஆண்டு' என்கிறீர்கள். அவர் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்பதில், அவருக்கே பலத்த, 'டவுட்' உள்ளதோ என்பதே என், 'டவுட்' ஆக
இருக்கிறது.இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிகாரப்பலத்தை முழுவதுமாக பயன்படுத்தி, ஆளுங்கட்சி அனைத்து இடங்களையும் கைப்பற்ற திட்டமிட்டுஉள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏலம் விடப்படுவதால், உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.'டவுட்' தனபாலு: இதையே தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், பல முறை கூறி, உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று, தடை வாங்க முயற்சித்தார்; முடியவில்லை. தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு கம்மியாக இருந்தால், 'ஜனநாயக ரீதியில் நடக்க வாய்ப்பில்லை...' என கூறுவதை, எதிர்க்கட்சிகள் வழக்கமாக கொண்டிருக்கின்றன என்பது, 'டவுட்'டே இல்லாமல், தமிழக வாக்காளர்களுக்கு தெரியுமே!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
15-டிச-201912:24:28 IST Report Abuse
S.V.SRINIVASAN சுடலை தி மு க தலைவரா அல்லது தி மு கவின் நகைச்சுவை கிளையின் தலைவரா ? மலேசிய தமிழர்கள் யாரவது இவரிடம் வந்து நாங்கள் மலேசியாவில் பிரச்சினையில் இருக்கிறோம் நீங்கள்தான் அபாய கரம் நீட்ட வேண்டும் யாரவது இவரிடம் மனு கொடுத்தார்களா? எல்லாம் தமிழ் நாட்டின் தலை எழுத்து. இவரை போன்றவர்களை தலைவர் என்று சொல்லி கொண்டு ஒரு கூட்டம் அலைகிறது.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-டிச-201905:58:59 IST Report Abuse
D.Ambujavalli ஒருவேளை மகனுக்குத் தமிழ்நாட்டு ‘மணியத்தை’ ஒதுக்கிக் கொடுத்துவிட்டு ராமா கிருஷ்ணா என்று அரசியல் துறவறம் பூண்டு மலேஷியா, சிங்கப்பூர் என்று கிளம்பப்போகிறாரோ? அந்நாட்டுத் தமிழர்கள் ‘எங்களை மீட்க வாரும் மீட்பரே’ என்று இவரிடம் கதறினார்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X