அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறுநில மன்னர்களாக அ.தி.மு.க., மந்திரிகள்: கடும் எரிச்சலில் அதிருப்தி கோஷ்டியினர்

Updated : டிச 16, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தேர்தல், அதிமுக, நடவடிக்கை, வேட்பாளர்கள், அதிருப்தி, பூசல்

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும், முழு அதிகாரத்தையும், மாவட்ட செயலர்களிடம், அ.தி.மு.க., தலைமை ஒப்படைத்துள்ளது.

இதற்கு, ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா பொதுச்செயலராக இருந்த வரை, எந்த விஷயமாக இருந்தாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளை அழைத்து, ஆலோசனை கேட்பார்; ஆனால், அவரே இறுதி முடிவு எடுப்பார். எந்த தேர்தலாக இருந்தாலும், தேர்தல் வியூகம் குறித்து, தலைமை நிர்வாகிகளை அழைத்து பேசுவார். வேட்பாளரை அவர் தேர்வு செய்தாலும், ஆட்சிமன்ற குழு பரிந்துரையை கவனத்தில் கொள்வார்.தற்போது, நிலைமை மாறியுள்ளது.

சமீபத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முதல்வரும், துணை முதல்வரும், மாவட்ட செயலர்களை மட்டும் அழைத்து பேசி உள்ளனர். பெரும்பாலான அமைச்சர்கள், மாவட்ட செயலர்களாக இருப்பதால், அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு அழைக்கப்படாதது, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


கோஷ்டி பூசல்அந்த கூட்டத்தில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு, மாவட்ட செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது, மாவட்ட செயலர்களுக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, அமைச்சர்கள் அனைவரும், தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் வலம் வருகின்றனர். தங்களுக்கு எதிரானவர்களை, கட்சியிலிருந்து ஓரம் கட்ட, அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இதனால், அனைத்து மாவட்டங்களிலும், கோஷ்டி பூசல் உச்சகட்டமாக உள்ளது.சமீபத்தில் நடந்த, லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில், அமைச்சர்கள், தங்களுக்கு எதிரானவர்களை ஓரம் கட்டினர். 'சீட்' கிடைக்கவிடாமல் தடுத்தனர்.

அதில் வாய்ப்பை இழந்தவர்கள், உள்ளாட்சி தேர்தல் வழியே, முக்கிய பதவிகளை பிடிக்க நினைக்கின்றனர். அதற்கும் அமைச்சர்கள் வழிவிடுவரா என்ற சந்தேகம், அமைச்சர்களின் எதிர் கோஷ்டியினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், முறையாக, 'சீட்' ஒதுக்கீடு நடக்காவிட்டால், கட்சியில் கடும் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.


முக்கியத்துவம்


இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள், சிலர் கூறியதாவது: அமைச்சர்களில் பெரும்பாலானோர், மாவட்ட செயலர்களாக உள்ளனர். மாவட்ட செயலர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தவறில்லை. ஆனால், அனைவரையும் அவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும்.

தற்போது, அமைச்சர்கள் அனைவரும், தி.மு.க., மாவட்ட செயலர்களை போல், குறுநிலை மன்னர்களாக மாற ஆசைப்படுகின்றனர். தங்களை மீறி, மாவட்டத்தில் எதுவும் நடக்கக் கூடாது என்று, விரும்புகின்றனர். அவர்களை பற்றி, கட்சி தலைமையிடம், புகார் செய்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதால், தங்கள் விருப்பப்படி செயல்படுகின்றனர். பன்னீர் ஆதரவாளர்களில் பெரும்பாலோர், அமைச்சர்களுக்கு எதிரானவர்கள்.

எனவே, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.மாவட்ட செயலர்களிடம், முழு அதிகாரத்தை வழங்க, தலைமை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிப்பர் என்பதால், அவர்களை ஆலோசனை கூட்டத்திற்கு அழைக்கவில்லை.


தயவு


தற்போது, தலைமை நிர்வாகிகள், தங்களுக்கு வேண்டியவர்களை நிறுத்த விரும்பினால் கூட, மாவட்ட செயலர்களின் தயவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட செயலர்களிடம், வேட்பாளர் தேர்வை ஒப்படைக்காமல், அவர்கள் பரிந்துரை செய்யும் நபர்களில் தகுதியானவர்களை, கட்சி மேலிடம் தேர்வு செய்து, வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அதிருப்தி வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாவதை தடுக்க இயலாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
15-டிச-201922:39:09 IST Report Abuse
Anantharaman Srinivasan இப்போ அதிமுகவில் எல்லோருமே jeyalalitha தான்.யாரும் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை. அவனவன் அவன் ஏரியாவில் மேஞ்சுக்கவேண்டியதுதான்...
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
15-டிச-201906:57:59 IST Report Abuse
Palanisamy Sekar நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்..அடித்துக்கொள்ளுங்கள் பேசிக்கொள்ளுங்கள்..ஆனால் திமுக மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்காதீர்கள் அப்படிப்பட்ட செயலை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். அதனை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருங்கிணைந்து செயல்படுங்கள்..அரவணைத்து செயல்படுங்கள்..நமக்கு முன்னே உள்ள ஒரே ஒரு தீயசக்தியை வளரவிடாதீர்கள்..இதனைத்தான் மக்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள்..ஆட்சியை பற்றிய மக்களின் எண்ணம் மோசமில்லை பரவாயில்லை என்றுதான் உள்ளது. ஆனால் திமுக மீதான மக்களின் எண்ணம் இதுவரை சிறிதும் மாறவே இல்லை அது தீயசக்தியென்பதை மக்கள் உணர்ந்தே இருக்கின்றார்கள். அதனால் ஆட்சியாளர்கள் கட்சியினரை ஊக்குவித்து செயல்படுங்கள்..அதுதான் மக்களுக்கு நீங்கள் வழங்கும் நல்ல செய்தியாக இருக்கும். எந்த கட்சியில் கோஷ்டி இல்லை எந்த கட்சியில் போட்டி பொறாமை இல்லை? அணைத்து கட்சியிலுமே இருக்கின்றதுதான்..அதனை பெரிதுபடுத்தும் செயல்களில் ஈடுபடாமல் திமுகவை அறவே ஒழித்து காட்டிட இந்த தேர்தலை பயன்படுத்தி காட்டுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-டிச-201906:01:35 IST Report Abuse
Mani . V இதை வன்மையாக கண்டிக்கிறேன். குறுநில மன்னர்கள் இல்லை, ரௌடிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X