பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளிகள் சாதனை கவர்னர் புரோஹித் பாராட்டு

Added : டிச 14, 2019
Advertisement
 மாற்று திறனாளிகள் சாதனை கவர்னர் புரோஹித் பாராட்டு

சென்னை: ''மத்திய, மாநில அரசுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், பிரீடம் அறக்கட்டளை சார்பில், மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு, நேற்று நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாநாட்டை துவக்கி வைத்ததுடன், 'ரெகோபேசிக்ஸ் - 2019' என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.அவசியம்அப்போது, கவர்னர் பேசியதாவது:மருத்துவ அறிவியல், பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. டாக்டர் சுந்தர் எழுதியுள்ள, 'ரெகோபேசிக்ஸ் - 2019' என்ற புத்தகம், டாக்டர்கள் உட்பட அனைவருக்கும் பயன் அளிக்க கூடியது. இயன்முறை மருத்துவம், மறுவாழ்வு போன்றவை, அனைவருக்கும் அவசியமானது.பிரீடம் அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கு, தேவையான உபகரணங்கள் மற்றும் மன ரீதியான மறுவாழ்வு அளிப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக, பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு முறையை, மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.மாற்றுத் திறனாளிகள், பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்; அவர்களை பாராட்டுகிறேன். பாராட்டுகுறிப்பாக, சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல், 'பாராலிம்பிக்' போட்டியில் தங்கம் வென்று, சாதித்தது பாராட்டுக்குரியது.இவ்வாறு, அவர் பேசினார்.எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பிரீடம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X