அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆட்சி மீதான கோபம் தேர்தலில் வெளிப்படும்': ஸ்டாலின்

Updated : டிச 16, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (16+ 94)
Advertisement
Stalin, ஆட்சி, கோபம், ஸ்டாலின், உச்சநீதிமன்றம், வழக்கு, தோல்வி, தேர்தல்

சென்னை: 'ஊராட்சி சபை கூட்டங்களில், ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டி தீர்த்த கோபமும், தி.மு.க., மீதான பற்றும், தேர்தல் களத்தில் வெளிப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஒன்பது மாவட்டங்களை புதிதாக உருவாக்கி, அங்கு இட ஒதுக்கீடு, மறு வரையறை செய்யாதது; ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் என, அ.தி.மு.க., அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து, குழப்பத்தை ஏற்படுத்தின.உள்நோக்கம்குழப்பத்தை நீக்கி, தேர்தல் நடத்துவதற்காக, உச்ச நீதிமன்றத்தை தி.மு.க., அணுகியது.

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள், அ.தி.மு.க., அரசும், மாநில தேர்தல் ஆணையமும், உள்நோக்கத்துடன் செயல்படுவதை அம்பலப்படுத்தின.அந்த வழக்கில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, ஏதோ தி.மு.க.,வுக்கு விழுந்த சம்மட்டி அடி என்று, அமைச்சர் ஒருவர், தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார்.

மூன்று ஆண்டுகளாக, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மரண அடி வாங்கி, மாநிலத்தின் மானத்தை வாங்கியிருப்பது, அ.தி.மு.க., ஆட்சி. தி.மு.க.,வின் ஜனநாயகம் காக்கும் பணியை, உச்ச நீதிமன்றம் பாராட்டவே செய்திருக்கிறது.

அ.தி.மு.க., அரசு, எத்தனை அத்துமீறல்கள் செய்ய நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன், கூட்டணி அமைத்து, முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு, தி.மு.க.,விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இருக்கிறது.ஊராட்சிகளில் மக்களை சந்தித்தபோது, ஆட்சியாளர்கள் மீது கொட்டி தீர்த்த கோபமும், தி.மு.க., மீது அவர்களுக்கு இருக்கிற பற்றுதலும், தேர்தல் களத்தில் நிச்சயம் வெளிப்படும்.

இதை, தி.மு.க., மாவட்ட செயலர்கள் உணர்ந்து, ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, ஆக்கப்பூர்வமான வியூகம் வகுக்க வேண்டும். பட்டியல்நேற்று காலை வரை, 11 மாவட்ட செயலர்கள், தங்கள் மாவட்டங்களில், கூட்டணி கட்சியினருடன் பேச்சை முடித்து, ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும், கூட்டணி கட்சியினருடன், சுமூக உடன்பாடு கண்டிட வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16+ 94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
15-டிச-201921:38:34 IST Report Abuse
வல்வில் ஓரி திருட்டு 2G டீம்கா தோற்கடிக்க படவேண்டும்🤨
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
15-டிச-201920:28:55 IST Report Abuse
konanki மிசா கைதி ன்னு பொய் சொன்னதை வேறே இப்போது ஜனங்கள் கண்டு பிடிச்சுட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
15-டிச-201920:25:30 IST Report Abuse
konanki மூல பத்திரம் காட்டிட்டு அப்பறம் மத்த விஷயம் பேசுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X