சவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்!

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (17)
Advertisement

புதுடில்லி: சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம், வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவிற்கு வந்திருக்கும் ஹிந்து, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் இது.லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒரு நாள் கழித்து ராஜ்யசபாவில் நிறைவேற்ற தாக்கல் செய்யப்பட்டது.






இந்த இடைப்பட்ட நாளில், பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில் என்ன நடந்தது என்பதை, ஒரு தமிழக எம்.பி., விரிவாக விளக்கினார்.எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் கூடியிருந்தனர். தி.மு.க.,- எம்.பி., சிவாவும், சிவசேனா மூத்த எம்.பி., சஞ்சய் ராவத்தும் ஒன்றாக இருந்தனர். 'லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறி விட்டது.

ஆனால், ராஜ்யசபாவில் இதை நிறைவேற்ற விட மாட்டோம். இங்கே, பா.ஜ.,விடம் பெரும்பான்மை இல்லை. மசோதாவை தோற்கடிக்க, எங்களிடம் ஒரு ரகசிய திட்டம் உள்ளது. அமித் ஷாவின் முகத்தில் கரியைப் பூசுவோம்' என, இந்த இருவரும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களிடம் மார்தட்டிக் கொண்டனர். பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த பா.ஜ., - எம்.பி.,யும், அமித் ஷாவிற்கு நெருக்கமானவருமான பூபேந்தர் யாதவ், 'எங்களுக்கு ஆதரவாக, 125 எம்.பி.,க்கள் உள்ளனர்; இது, பெரும்பான்மையை விட அதிகம்; உங்கள் முகத்தில் தான் கரி பூசப்பட உள்ளது' என்றார். ஆனால் சிவாவும், சஞ்சய் ராவத்தும், 'பார்த்துக் கொண்டேயிருங்கள்... உங்கள் முகத்தில் கரி பூசுவது நிச்சயம்' என, அதீத நம்பிக்கையுடன் சவால் விட்டனர்.





கடைசியில், குடியுரிமை மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. சிவாவுடன் கை கோர்த்து சவால்விட்ட சஞ்சய் ராவத் கூட, அரசுக்கு எதிராக ஓட்டளிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டார். 'அவ்வளவு நம்பிக்கையுடன் பேசினீர்களே, என்னாச்சு உங்க ரகசிய திட்டம்' என, மற்ற எம்.பி.,க்கள் கேட்க, சிவாவும், சஞ்சய் ராவத்தும் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர்.'சிவாவின் பதவிக்காலம் இன்னும் நான்கே மாதங்களில் முடியப்போகிறது; எதற்கு இவருக்கு இந்த தேவையில்லாத வேலை' என, சில எம்.பி.,க்கள் கேட்கின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-டிச-201910:59:12 IST Report Abuse
Sampath Kumar மிருக பலத்துடன் அமர்ந்து கொண்டு எது வேணாலும் சொல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Chennai,இந்தியா
15-டிச-201913:18:12 IST Report Abuse
KavikumarRam புஷ்பி மேடம் ஒரு தீர்க்க தரிசி. ரெண்டு வருசத்துக்கு முன்னாலேயே திருச்சி சிவாவின் செவிட்டில் அடிச்சு தண்டனை குடுத்துட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-டிச-201910:23:24 IST Report Abuse
A.George Alphonse இவர்கள் எல்லாம் நடிகர்கள். அவகாச வாதிகள். எங்கே எப்படி நடக்கவேண்டும் என்று கணக்கிட்டு காய் நகர்த்தும் புத்திசாலிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X