தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., இலக்கு!

Updated : டிச 16, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement
தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., இலக்கு!

ஐதராபாத் : கர்நாடகாவில், எடியூரப்பா தலைமையிலான, அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்ததையடுத்து, பா.ஜ., உற்சாகம் அடைந்துள்ளது. தங்களின், 'தெற்கு பார்வை' திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக, தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க, பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளது.

தென் மாநிலங்களில், கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் செல்வாக்கு இல்லை. 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தது. ஆனால், இரண்டு முறையும், கர்நாடகாவை தவிர, தென் மாநிலங்களில், பா.ஜ.,வால் வெற்றி பெற முடிய வில்லை. இதையடுத்து, 'தெற்கு நோக்கி பார்வை' என்ற திட்டத்தை, பா.ஜ., துவக்கியுள்ளது.


தகுதி நீக்கம்


கர்நாடகாவில், கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., வெற்றி பெற்றது. எனினும், பெரும்பான்மை பலம் இல்லாததால், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைந்தது. இந்த ஆண்டு, மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி தோல்வி அடைந்தது.

கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டு, 17 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்தது. சமீபத்தில் நடந்த, 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 12ல் வென்று, எடியூரப்பா அரசு பெரும்பான்மை பலத்தையும் பெற்று விட்டது. இது, பா.ஜ.,வுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில், தெலுங்கானாவில், மொத்தம் உள்ள, 17 தொகுதிகளில், 13ல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும்; நான்கில், பா.ஜ.,வும் வெற்றி பெற்றன. அதிலும், நிஜாமாபாத் தொகுதியில், முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பா.ஜ.,வின் அரவிந்திடம் தோல்வி அடைந்தார்.

இதுதான், தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, பா.ஜ.,வை கருத வைத்து உள்ளது. இதையடுத்து, கட்சியை பலப்படுத்தவும், மக்களிடம் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகளை பா.ஜ., எடுத்து வருகிறது. இதனால், சந்திரசேகர ராவ் அரசை, பகிரங்கமாக, மாநில, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். மாநிலத்தில் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடப்பதாக, குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவராக இப்போது, டாக்டர் லட்சுமணன் உள்ளார். மிகவும் மென்மையாக பேசக் கூடியவர். இவரை, ஐதராபாத், செகந்திராபாத் நகரங்களை தவிர, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோருக்கு தெரியாது.


அதனால், ஆவேசமாக பேசி, தொண்டர்களை செயல்பட வைக்கும் ஒருவரை, தலைவராக நியமிக்க, பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இது பற்றி மாநில, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மாநிலத்தில் கட்சியினரை உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கும் வகையில், தலைவர் ஒருவரை நியமிக்க, அமித் ஷா ஆலோசித்து வருகிறார். விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை எதிர்கொள்ள, பா.ஜ.,வால் மட்டுமே முடியும். இங்கு, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சிகள் வலுவாக இல்லை.


எதிர்காலம் இல்லை


தெலுங்கு தேசம் மீது, தெலுங்கானா மக்களுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை. அதனால், சந்திரசேகர ராவை எதிர்கொள்ள, பா.ஜ.,வால் மட்டுமே முடியும். தெலுங்கானாவில், 2022ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம். குறைந்தபட்சம் வலுவான கட்சியாக இருப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய தலைவர் யார்?


தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் டாக்டர் லட்சுமணனின் பதவி காலம், இம்மாதத்துடன் முடிகிறது. புதிய தலைவரை நியமிக்க, கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால், தலைவரை டில்லியிலிருந்து தேர்வு செய்யாமல், மாநில தலைவர்களே பேசி, ஒருமித்த முடிவு எடுக்குமாறு, கேட்டுக் கொண்டுள்ளார். கடசியின் தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ், தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.

கர்நாடகாவில், எடியூரப்பாக அரசு பெற்ற வெற்றிக்கு, அம்மாநில பொறுப்பாளராக செயல்பட்ட முரளிதர் ராவும் காரணம் என, கட்சியினர் கூறுகின்றனர். லோக்சபா எம்.பி.,க்கள் அரவிந்த், சஞ்சய் குமார் ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இருவரும் இளைஞர்கள் என்பதுடன், கட்சி நிர்வாகத்தில் அனுபவம் இல்லாதவர்கள் என்பது, ஒரு குறை. மேலும், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களை, தலைவராக நியமிக்கக்கூடாது என, பா.ஜ.,விடம், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-டிச-201912:43:51 IST Report Abuse
இந்தியன் kumar மன்னர் ஆட்சியை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் முடிவு கட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-டிச-201922:52:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாலியல் வன்முறை செஞ்சவங்களை நாலு நாளில் என்கவுன்டர் செஞ்சது லோக்கல் பாஜககட்சி தலைவர்களுக்கு பேதியாயடிச்சாம். ராமராஜ்ஜியத்துலே இப்படி நடக்காது. அதான் இருக்குற ஆட்சியை பின்வாசல் வழியா போயி கலைக்கிறதுக்கு ரெடியாயிட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-டிச-201918:02:11 IST Report Abuse
Endrum Indian அப்போ ஒழிஞ்சாரா சந்திரசேகர ராவ்???தெலங்கானாவிற்கு நற்காலம் வரப்போகின்றதா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X