அரசு கட்டடங்களுக்கு 'கட்சி கலர்': ஜெகன் அரசுக்கு கோர்ட் 'குட்டு'

Updated : டிச 16, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 அரசு கட்டடங்களுக்கு 'கட்சி கலர்': ஜெகன் அரசுக்கு கோர்ட் 'குட்டு'

ஐதராபாத் : 'ஆந்திராவில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டடங்களுக்கு, ஆளும் கட்சிக் கொடியின் நிறத்தில் வர்ணம் பூசுவது தவறு' என, அம்மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், கிராம சபை கூட்டங்களை தவறாமல் நடத்த, முதல்வர் ஜெகன்மோகன் சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து, கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டடங்களுக்கு, புதிதாக வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. குண்டூர் மாவட்டத்தின் பல்லப்பாடு கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டடத்திற்கு, ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சிக் கொடியின் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளதாக, ஆந்திர உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.கே.மகேஸ்வரி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'அரசுக்கு சொந்தமான கட்டடங்களுக்கு, கட்சிக் கொடிகளின் நிறத்தில், வர்ணம் பூசுவது தவறு. இது தொடர்பாக, குண்டூர் மாவட்ட நிர்வாகம், 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
15-டிச-201921:28:18 IST Report Abuse
Krishna This Proves That Jagan Is Cheap Dirty Vote Hungry Politician His Pro Women Law Is Also Same
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-டிச-201907:59:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மத்திய ஆளும் கட்சி கலர் பூசினா தப்பில்லை.. பக்தாள்ஸ்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-டிச-201905:52:02 IST Report Abuse
Mani . V மற்றொரு கட்சி கண்ணில் காணும் அனைத்துக்கும் காவி கலர் பூசுகிறது. அதை கோர்ட் கண்டிக்க முடியவில்லை. இருந்தாலும் நாம், "சட்டம் அனைவருக்கும் சமம்" என்று இன்னும் நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X