சங்கீத நாடக அகாடமியின் 'மாஜி' தலைவர் மீது வழக்கு

Added : டிச 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 சங்கீத நாடக அகாடமியின் 'மாஜி'  தலைவர் மீது வழக்கு

புதுடில்லி: கலையரங்கத்தை புதுப்பிக்கும் பணியில் முறைகேடு செய்ததாக, சங்கீத நாடக அகாடமியின் முன்னாள் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞருமான லீலா சாம்சன் மற்றும் கலாசேத்ரா நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரிகள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பரத நாட்டிய கலைஞர் லீலா சாம்சன், 68. மத்திய அரசின் கலாசார துறை கட்டுப்பாட்டில் செயல்படும் சங்கீத நாடக அகாடமியின் முன்னாள் தலைவர். சென்னை கலாசேத்ரா பவுண்டேஷனின் தலைவராக, 2005 - 12 வரை, லீலா சாம்சன் இருந்தார். அப்போது, விதிமுறைகளை மீறி, சிலருக்கு ஒப்பந்த பணிகளை கொடுத்ததாக, அவர் மீது புகார் எழுந்தது.

இது குறித்து, மத்திய கலாசார துறையின் கண்காணிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், சென்னை, கலாசேத்ரா வளாகத்தில், கூத்தம்பலம் கலையரங்கத்தை புதுப்பிக்கும் பணியை ஒப்பந்தத்துக்கு விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, கலாசார துறையின் சார்பில், சி.பி.ஐ.,யில் புகார் அளிக்கப்பட்டது.

கலையரங்கம் புதுப்பிக்கும் பணியில், மத்திய நிதித்துறையின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில், 7 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக லீலா சாம்சன், கலாசேத்ரா பவுண்டேஷனின் முன்னாள் தலைமை கணக்காளர் டி.எஸ்.மூர்த்தி, கணக்காளர் எஸ்.ராமச்சந்திரன், பொறியியல் துறை அதிகாரி வி.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
15-டிச-201911:58:54 IST Report Abuse
Appan .இந்த பெண்மணி புகழ் பெற்ற பாரத நாட்டிய கலைஞர்...இவர் காலத்தில் தான் சென்னையின் கலெச்சத்திர புகழ் பெற்றது. இதற்கும் இவர் பிறப்பால் ஒரு கிறிஸ்டியன்..ஆனால் பரதநாட்டிய ஈடுபட்டால் முழு சிவா பக்தனாக மாறியவர்..
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-டிச-201908:02:41 IST Report Abuse
Darmavan கிருஸ்துவ மத மாறிகளுக்கு இந்த பதவி கொடுத்தது சரியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X