அத்துமீறுவோருக்கு, 'துாக்கு' தான் தீர்வு?

Added : டிச 15, 2019 | கருத்துகள் (3) | |
Advertisement
நல்ல பண்புகள் நிறைந்த நம் நாட்டிற்கு, தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக மாறியுள்ளன, பாலியல் பலாத்கார குற்றங்கள். மூன்று மாத பிஞ்சு முதல், 90 வயது பாட்டி வரை, பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் வெகுண்டெழுந்துள்ள பொது ஜனங்கள், 'பாலியல் பலாத்கார குற்றங்களை தடுக்க, சட்டங்கள் வலுவாக்கப்பட வேண்டும்; தண்டனை கடுமையானவையாக மாற்றப்பட வேண்டும்'
 அத்துமீறுவோருக்கு, 'துாக்கு' தான் தீர்வு?

நல்ல பண்புகள் நிறைந்த நம் நாட்டிற்கு, தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக மாறியுள்ளன, பாலியல் பலாத்கார குற்றங்கள். மூன்று மாத பிஞ்சு முதல், 90 வயது பாட்டி வரை, பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதனால் வெகுண்டெழுந்துள்ள பொது ஜனங்கள், 'பாலியல் பலாத்கார குற்றங்களை தடுக்க, சட்டங்கள் வலுவாக்கப்பட வேண்டும்; தண்டனை கடுமையானவையாக மாற்றப்பட வேண்டும்' என்கின்றனர்.ஒரு நாள் கூட இடைவெளி இன்றி, நாடு முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களும், அந்த குற்றங்களை நடத்தும் கயவர்களின் கொடூரமான செயல்களும், மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.மனித உரிமை'கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோரை, சுட்டுக் கொல்ல வேண்டும்; துாக்கில் போட வேண்டும்; காயடிக்க வேண்டும்; கைகளை வெட்ட வேண்டும்' என்பன போன்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.ஐதராபாதில், கால்நடை பெண் மருத்துவர், நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டதை அறிந்த, பெண் எம்.பி.,க்கள், சமீபத்தில், பார்லி.,யில் அழுதும், ஆக்ரோஷமாக பேசினர்.ஆக்ரோஷமாக பேசியவர்களில் பலர், மலரினும் மெல்லியவர்கள் என, இது நாள் வரை கருதப்பட்டவர்கள். பூவுக்குள் பூகம்பம் நிகழ்ந்தது போல இருந்தன, பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு எதிராக அவர்கள் தெரிவித்த கருத்துகள். அந்த சபையில் எதிரொலித்த வார்த்தைகள், 'தண்டனைகள் கட்டாயம் தேவை' என, ஆண் எம்.பி.,க்களையும் ஆமோதிக்க செய்யும் வகையில் இருந்தன.சமீப காலமாக, 'டிவி' மற்றும் பத்திரிகைகளில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளில், முதன்மை பெற்றுள்ளது, பாலியல் பலாத்கார கயவர்களுக்கான தண்டனைகள் குறித்த அம்சம் தான். பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனையை, உடனடியாக வழங்க வேண்டும் என்பதாகத் தான், அவை உள்ளன.எனினும், ஓரணியினர், 'தண்டனையால் எதுவும் சரியாகாது' என்கின்றனர்.இன்னும் சிலர், 'சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்' என வலியுறுத்துகின்றனர். பெரும்பான்மையினர், 'கொடூரமான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு, அரபு நாடுகளில் விதிக்கப்படுவது போன்ற தண்டனை விதிக்கப்பட வேண்டும்' என்கின்றனர்.அவர்களின் கோரிக்கை, ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் காதுகளுக்கு எட்டியதோ என்னவோ, பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, துாக்கு தண்டனை விதித்து, சட்டம் இயற்றி உள்ளார்.நம் நாட்டில், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அதிகபட்சம், ஆயுள் தண்டனையே உள்ள நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக, பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்படும் என, சட்டம் இயற்றியுள்ளார்.அதுவும், குற்றம் நிகழ்ந்த, 21 நாட்களுக்குள் முழு விசாரணையையும் முடித்து, பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்ட கயவர்களுக்கு, துாக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட வேண்டும் என, சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதை, அந்த மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பெண்கள், குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் நடுநிலையாளர்கள் வரவேற்றுள்ளனர்.பொய் சாட்சிஇதை பின்பற்றி, பிற மாநிலங்களிலும், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு துாக்கு தண்டனைக்கான சட்டங்கள் இயற்றப்பட வாய்ப்பு உள்ளது.எனினும், மனித உரிமையாளர்கள், மனித உரிமையை வலியுறுத்தும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. துாக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளால், பாலியல் பலாத்காரங்களை தடுத்து நிறுத்த முடியாது என்கின்றனர்.அப்படியானால், வேறு என்ன வழியில், இந்த குற்றங்களை நிறுத்த முடியும் என, யோசிக்கும் போது, துாக்கு தண்டனைக்குப் பதிலாக, கீழ்கண்ட, 'நடவடிக்கைகளை' மேற்கொள்வதன் மூலம், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு, தண்டனை வழங்கலாம் என்ற யோசனை தென்படுகிறது.அநேக, கொடூரமான, கூட்டு பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடும் கயவர்களை பிடித்து, உடனடியாக துாக்கில் போட்டு கொல்வதை விட, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகும் வகையில், ஆயுள் முழுக்க சிறை தண்டனை வழங்கலாம்.இத்தகைய கொடியவர்களுக்கு, ஜாமின், பரோல், நன்னடத்தை விடுதலை என்ற எவ்வித சிறப்பு சலுகைகளும் இல்லாமல், ஆயுள் முழுக்க சிறையில் அடைக்கலாம்.ஒன்றுக்கு மேற்பட்ட, பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர் என தெரிந்தால், அவரை போலீசார் கண்காணிக்க வேண்டும். அதற்காக அவரின் உடலில், கம்ப்யூட்டர், 'சிப்' பொருத்தி, அந்த கயவனின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்க வேண்டும்.அந்த காலத்தில், கிராம சபைகளும், கிராம பஞ்சாயத்துகளும் வழங்கியது போல, ஒதுக்கிவைப்பு என்ற தண்டனையை வழங்கலாம். பாலியல் பலாத்கார குற்றவாளி என்பது ஊர்ஜிதமானால், அந்த நபரையும், அவனின் குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.அதாவது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதற்குப் பதில், எந்த சமூக பாதுகாப்பும் அந்த நபருக்கு கிடைக்காமல் செய்ய வேண்டும். போன் இணைப்பு கொடுக்கக் கூடாது; தண்ணீர் வசதி தர மறுப்பது; மின் வசதியை தடை செய்வது; அரசின் எந்த சேவைகளும் அவனுக்கும், அவனின் நெருங்கிய உறவினர்களுக்கும் கிடைக்க விடாமல் செய்து விட்டால் போதும்.நம் நாளிதழின், 'சிந்தனைக்களம்' பகுதியில், கடந்த வாரம், பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரைபடி, 'ஆண் குழந்தைகளை, 'அடித்து' வளர்க்க வேண்டும். 'தவறும்பட்சத்தில், அதற்கு பொறுப்பான பெற்றோர், மனைவி, குடும்பத்தாருக்கும் தண்டனை வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தார்.இது போன்ற தண்டனைகள், அது குறித்த அறிவிப்பு, அவற்றை பொது வெளியில் செயல்படுத்துவது, அதனால் அந்த நபர் சந்திக்கும் பாதிப்புகளை, பிறர் அறியச் செய்யும் போது, குற்றங்களும், குற்றங்களின் கொடூரங்களும் குறைய வாய்ப்பு உள்ளது.பாலியல் பலாத்கார குற்றங்கள், இப்போது அதிகமாக நடக்கின்றன; அந்த காலத்திலும் நடந்துள்ளன. அப்போது, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்துள்ளன. அந்த குற்றங்களுக்காக, குற்றவாளிக்கும், அவன் குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட கடும் தண்டனைகளால், அது போன்ற குற்றங்கள் அப்போது அதிகம் நிகழவில்லை.இதை கல்வெட்டுகளும், வரலாற்று புதினங்களும், சில சான்றுகளும் எடுத்துரைக்கின்றன. ஒரு ஆடவன், பெண் ஒருத்தியை அவளது விருப்பத்திற்கு மாறாக, பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான். தனக்கு நேர்ந்த அநீதி குறித்து அந்தப் பெண், மக்கள் மன்றத்தில் முறையிடுகிறாள். குற்றம் சாற்றப்பட்டவன், குற்றத்தை மறுக்கிறான்; பொய் சத்தியமும் செய்கிறான். அவனுக்காக, இன்னும் சிலர், பொய் சாட்சியம் கூறியுள்ளனர்.ஆயுள் தண்டனைகிராம பஞ்சாயத்தில் அனைவரும் முறையாக விசாரிக்கப்படுகின்றனர். அதில், குற்றமும், அதை பொய்யாக்க கூறப்பட்ட சாட்சியங்களும் அம்பலத்துக்கு வருகின்றன. அத்துமீறிய ஆண் மற்றும் அவனுக்கு ஆதரவாக சாட்சியம் கூறியவர்கள் உட்பட அனைவரும் குற்றவாளிகள் என, நீதி நிலைநாட்டப்படுகிறது.அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலைகளில், சுண்ணாம்பு கற்களை வைத்து, அந்த கற்கள் சுண்ணாம்பு நீராகும் வரை, வெயிலில் நிற்க வைத்து, தண்டனையை நிறைவேற்றியிருக்கின்றனர்.பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிக்க, மற்றொரு முக்கிய காரணமாக, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார் கூறப்படுகிறது.உதாரணமாக கூற, கோவையில் பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவளையும், சகோதரனையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றவர்களில் ஒருவனுக்கு, ஒன்பது ஆண்டுகள் ஆகியும், இன்னும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர். உண்மை தானே!அதுபோல, டில்லியில், 26 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாரே; அந்த வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொடியவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் ஆகியும், இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லையே!பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, உ.பி.,யின், உன்னாவ் என்ற இடத்தில், சில நாட்களுக்கு முன், ஓராண்டுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை, ஒரு கும்பல் தீ வைத்து எரித்து கொன்றுள்ளதே!அதற்கு முன், சில மாதங்களுக்கு முன், உ.பி.,யின் ரே பரேலியில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், தன்னை காட்டிக் கொடுத்தாள் என்பதற்காக, அந்த பெண் மீது லாரியை ஏற்றி, கொலை செய்ய துாண்டிய விவகாரங்களும் நாம் அறிந்தது தானே!எனவே, பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு, தயவு, தாட்சண்யம் இன்றி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் துாக்கு தண்டனை அல்லது ஆயுள் முழுக்க சிறை தண்டனை போன்ற கொடிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் தான், அதை பலரையும் அறியச் செய்தால் தான், எதிர்காலத்தில் நம் பெண்களும், குழந்தைகளும் நிம்மதியாக வெளியே சென்று வர முடியும் என்ற குரல் வலுத்துள்ளது.நாம் இருப்பது ஜனநாயக நாடு. சட்டம் உள்ளது; நீதிமன்றம் இருக்கிறது; தண்டனையை நிறைவேற்றுவது மட்டும் தான் போலீசாரின் கடமை. அவர்கள், 'என்கவுன்டர்' செய்யக் கூடாது என்பன போன்ற குரல்களும், இங்கு ஒலிக்கின்றன.ஜனநாயகம் இருந்தும், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டனவே, இதை அத்தகையோருக்கு நினைவுபடுத்த வேண்டும்.தொடர்புக்கு:இ - மெயில்: mdurgn@gmail.comமொபைல் எண்: 98946 87796பாஸ் ஓகேஇவரின் கட்டுரை, உரத்த சிந்தனை பகுதியில், 2019 மே, 18ல் வந்துள்ளதுஎடிட் செய்யப்பட்டது அத்துமீறுவோருக்கு, 'துாக்கு' தான் தீர்வு?-ஆர்.கணேசன், சமூக ஆர்வலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (3)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
23-டிச-201913:25:58 IST Report Abuse
Sridhar நாம் எல்லாவற்றுக்கும் கோபப்படுகிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அதையும் கடந்து - சொல்லப்போனால் மறந்து வேறு ஒரு விசயத்திற்கு தாவிவிடுவோம் அந்த கோபமும் பாவம் இருக்கும் இடம் தெரியாமல், மறைந்து போகும். தீவிரமாக யோசித்து நம் நாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப என்னென்ன செய்தால் இந்த குற்றங்களை தவிர்க்கலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு எதோ இவ்வகையான குற்றங்கள் நம் நாட்டில் மட்டும்தான் நடப்பது போலவும் எதோ இப்போதுதான் நடப்பது போலவும் ஊடகங்கள் பரப்பும் பிரச்சாரங்களை உண்மை என நம்பி கருத்துக்கள் கூறுவோம். உண்மை என்னவென்றால், உலகிலேயே இந்தியாவில் தான் எல்லாவகை குற்றங்களும் மிக குறைவு. பண்டைய கால கட்டத்தில், காட்டிலிருந்து மிருகங்கள் திடீரென ஊருக்குள் வந்து தாக்கும். காடுகள் அழிந்துபோனதால், விலங்குகளும் குறைந்தன, ஒரு வழியாக அப்பிரச்சியிலிருந்து வெளிவந்தோம். இன்று மனிதர்களுக்குளேயே இருக்கும் சில மிருகங்கள் வன்முறையில் ஈடுபடுகின்றன. இத்தகைய செயல்கள் உலகம் எங்கிலும் காலம் காலமாக நடந்துவருவதை பார்க்கும்போது, இதுவும் சுனாமி போல, பெருவெள்ளம், எரிமலை, பூகம்பம் போல இயற்கையின் விந்தைகளில் ஒன்றோ என என்ன தோன்றுகிறது. இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் கவனத்துடன் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இயற்க்கையை மாற்றுவேன் என் அலைவது அவ்வகையான குற்றங்களை குறைக்க உதவாது. கடுமையான தண்டனைகளும் இவ்வகை குற்றங்களை குறைத்தாக எந்த நாட்டிலும் கண்டறியப்படவில்லை. விரைவு தண்டனை என்ற பெயரில் தவறாக ஒரு நிரபராதியை தூக்கிலிட்டார்கள் என்றால் அதற்க்கு யார் பொறுப்பேற்பார்கள்? மேலும் பல குற்றச்சாட்டுகள் போலியாக உருவாக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில், விரைவு தீர்ப்பு/தண்டனை போன்ற விஷயங்கள் அந்த நிமிட அரசியலுக்கு ஆறுதலாக இருக்கலாமே தவிர, அதன் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும். பெண்கள் தங்கள் உடலக்கூற்றை அறிந்து ஆணுக்கு நிகர் என்று அலையாமல் தங்கள் வாழ்க்கை முறையை பத்திரமாக அமைத்து கொண்டாலே, பாதி குற்றங்கள் குறையும். மறுபாதிக்கு இப்போது தீர்வே இல்லை. அதுவே உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X