பொது செய்தி

இந்தியா

மஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (13)
Advertisement

ஆமதாபாத்: ''நாடு சுதந்திரம் அடைந்தபின், காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என, மஹாத்மா காந்தி விரும்பினார்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.







குஜராத் மாநிலம், ஆனந்தில் உள்ள கிராமப்புற மேலாண்மை பயிற்சி மையத்தின், 40 ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்; அவர் பேசியதாவது:மஹாத்மா காந்திக்கு, இரண்டு முக்கிய விருப்பங்கள் இருந்தன. அதில் முதலாவது, நாடு சுதந்திரம் அடைந்த பின், காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்பது. காங்கிரஸ் கட்சி, சுதந்திர போராட்டத்துக்காக துவக்கப்பட்டது.






மஹாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, பால காங்காதர திலகர் ஆகியோர், சுதந்திரத்துக்காக போராடினர். நாடு சுதந்திரம் அடைந்த பின், அவர்களது லட்சியம் நிறைவேறி விட்டது. அதற்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு வேலையில்லை. மகாத்மா காந்தியின் இரண்டாவது விருப்பம், கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பது. ஆனால், நாம் அனைவரும் இதை மறந்து விட்டோம். யாரும் கிராமத்துக்கு செல்வதே இல்லை. அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மக்கள் கொண்டாடினர். அனைவரும் வரவேற்றனர். இதன்மூலம், நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
15-டிச-201912:57:18 IST Report Abuse
MIRROR காந்தி மதம் வேண்டாம் என்று சொன்னார், ஆனால் கேட்டீர்களா? காந்தி விவசாயம் தான் வேண்டும், தொழிற்சாலை பாவம் என்றார், ஆனால் கேட்டீர்களா? காந்தி இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார், ஆனால் கேட்டீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
15-டிச-201912:09:51 IST Report Abuse
Subburamu Krishnaswamy Sonia and Raul will decimate the party soon.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
15-டிச-201908:02:45 IST Report Abuse
 N.Purushothaman ஹலோ ..ஆப்பு ...நவகாளியில காந்தி என்ன செஞ்சாருன்னு படு பயங்கரமா கட்டுக்கதையை விட்டதுக்கு நன்றி ...இப்படித்தான் பல பேரு இருக்காய்ங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X