பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பறவை ஆர்வலர்கள் சந்திப்பு கம்பம் கல்லூரியில் துவக்கம்

Added : டிச 15, 2019
Share
Advertisement

கூடலுார்:தமிழக பறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர்
கல்லுாரியில் துவங்கியது.

மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராம் துவக்கி வைத்தார்.
கல்லுாரி நிறுவனச் செயலர் ராமகிருஷ்ணன், கவுரவ வனக்காப்பாளர் டாக்டர் ராஜ்குமார்,
கல்லுாரி இணைச்செயலாளர் வசந்தன், முதல்வர் ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் 6 வது முறையாகவும், தேனி மாவட்டத்தில் முதன் முறையாகவும் தமிழக பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடக்கும் இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் இருந்து பறவை ஆர்வலர்கள் கலந்து கொண் டனர். பறவைகளின் வாழ்வியல் முறை மற்றும் அதன் வகைகள் குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர். புகைப்படம், புத்தக கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அருகில் உள்ள கண்மாய்ப் பகுதிகளில் பறவைகளை அறிய களப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பறவை விளையாட்டு, பறவைகளின் வகைகள் குறித்து விளக்கப்பட்டது. பொம்மலாட்டம் , பறவைகள் குறுநாடகம் நடந்தது. பார்த்திராத பல்வேறு அரிய வகை பறவைகள் குறித்து ஒளிப்படம் மூலம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிஇரண்டாவது நாளாக இன்றும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X