அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலுமணிக்கு தி.மு.க., பதில்

Added : டிச 15, 2019 | கருத்துகள் (12)
Advertisement
வேலுமணிக்கு தி.மு.க.,  பதில்

சென்னை: 'தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அமைச்சர் வேலுமணிக்கு அருகதை இல்லை' என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடித்து தன் சொந்த கஜானாவையும் தனக்கு பதவி கொடுத்தவர்களின் கஜானாவையும் நிரப்பி வரும் அமைச்சர் வேலுமணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அருகதை இல்லை.

உள்ளாட்சி நிர்வாகத்தில் ஜீரோ; நேர்மையில் ஜீரோ; வெளிப்படையான டெண்டர் விடுவதில் ஜீரோ என பல ஜீரோக்களை வாங்கி ஊழலிலும் பணம் சுருட்டுவதிலும் ஹீரோவாக இருக்கும் வேலுமணிக்கு நாகரிகமாக அறிக்கை விட தெரியவில்லை.

தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களில் 349 ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழலை விசாரிக்க அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் ஊழலில் இருந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடந்த ஊழல் குறித்து விசாரித்தாலே அமைச்சர் சிறை செல்வது உறுதி. ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் கூறட்டும்.

முதல்வரையும் ஊழல் பணத்தையும் வைத்து போலீஸ் அதிகாரிகளை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் வேலுமணி முதலில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். தி.மு.க. தலைவரை ராஜினாமா செய்யும்படி கேட்க அவருக்கு தகுதியில்லை.மக்களை சந்திக்கும் தைரியம் இருந்தால் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தல் களத்திற்கு வாருங்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையையே ஓட ஓட விரட்டி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
15-டிச-201912:25:06 IST Report Abuse
Appan அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் நாலு கால் அமைச்சர்கள்..அவர்கள் சுய கவுரமாம் இல்லாதார்கள்..இவர்கள் ஐசி எப்படி இருக்கும்..? அதற்காக திமுக நல்ல கட்சி என்று சொல்லமுடியாது..ஆனால் திமுகவில் இப்போ நல்ல பேசாளர்கள் உள்ளார்கள்..ஆனால் திமுக முகவும் அதிமுக போல் ஒழுக்கம் இல்லாதார்கள். நாலு காலீல் தமிழும் அதிமுகவை வீட்டா திமுக நல்லது தான்.. திமுக மாறினால் ஆட்சியை பிடிக்கும்..முக காலம் போல் துதி பாடினால் மக்கள் ஒட்டு போட மாட்டார்கள்..திமுக முக குடியும்பத்தின் சொத்தல்ல..
Rate this:
Share this comment
Cancel
NATARAJAN - Coimbatore,இந்தியா
15-டிச-201908:36:07 IST Report Abuse
NATARAJAN ஊழலே கடல் என நீந்தி சொத்துக்களை குவித்திருக்கும் திமுக மற்ற அரசியல் கட்சிகளை பற்றி குறை சொல்ல எந்த ஒரு அருகதையும் இல்லை என மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-டிச-201908:23:43 IST Report Abuse
ஆரூர் ரங் உள்ளாட்சிகளில் இரண்டு திராவிஷக் கட்சிகளுக்குமே ஒன்றுக்கொன்று கூட்டுக்கொள்ளையும் கட்டிங் பிரித்தாலும் உண்டு . கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள்
Rate this:
Share this comment
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-டிச-201911:39:46 IST Report Abuse
வந்தியதேவன்உங்க ஆளுங்க மட்டும் யோக்கிய சிகாமணிங்களா...? எல்லாருமே திருடங்கதான்... தேன் எடுக்குறவன்... புறங்கைய நக்காம இருப்பானுங்களா..? என்னவோ... உங்க கட்சிக்காரங்க எல்லாருமே குடிசை வீட்ல வாழுற மாதிரியும்... நடந்தேதான் போறாப்புலேயும்... யோக்கியத்தனத்தப் பத்தி பேசக்கூடாது.... இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அப்பால தெரியும்.. எவனெவன் திகாருக்கு போகப் போறாங்கன்னு.. ஒண்ணுமில்ல.. சென்னை..ல போன வருஷம்தான் கட்சில ஒரு ஆள் சேர்ந்தா.. அந்தாளு அப்படி ஒண்ணும் பணக்காரன் இல்ல.. வாடகை வீட்ல..தான் குடியிருந்தான்... இப்ப என்னாடான்னா.. ஆடிக்காருதான்.. ஒரு அஞ்சாரு பிரம்மாண்ட பங்களாதான்.. விமானப் பயணம்தா.. ஒரு வருஷத்துல உழைச்சு கோடீஸ்வரன் ஆயிட்டாரா? அவரு? போங்கய்யா... அரசியல் என்பதே முடிச்சவிக்கி, மொள்ளமாரி, திருட்டு, ஊழல்தனம் நிறைஞ்சதுதான்... உங்க கட்சிக்காரங்க எல்லாம் மந்திரியா இருந்து பஸ்..ல போன “கக்கன்”...னா என்ன...?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X