பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கைக்கு திடீர் 'மவுசு' விலை உயர்வால் அதிர்ச்சி

Added : டிச 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 முருங்கைக்கு திடீர் 'மவுசு' விலை உயர்வால் அதிர்ச்சி

மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில், முருங்கைகாய் விலை உச்சம் தொட்டதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்கள் அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் காய்கறிகளில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு. மிக மலிவாக கிடைத்த இந்த காய், பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.இதில், பலவகையான சத்து உள்ளதால் மிகவும் ஆரோக்கியம் வழங்கும் காயாக உள்ளது. தற்போது, இதன் விலை உச்சம் தொட்டு உள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மடத்துக்குளம் பகுதியில் இதன் விலை, கிலோ, 540 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு முருங்கைக்காய், 30 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'நடுத்தர மற்றும் ஏழைமக்கள் குறைந்த செலவில் முருங்கை சாம்பார் தயாரித்து உணவாக்கினர். ஆனால், இன்று வரலாறு காணாத விலை ஏற்றம், திணற வைக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
15-டிச-201923:36:30 IST Report Abuse
ezhumalaiyaan Makkalukku porumai enbadhey illai. Varalaaru kaanaadha mazhaiyin kaaranam indha nilai.nilam nangu eeram ulladhal ini varum maadhangalil kaay Rs 5kkukooda virkakoodum.appodhu vivasaayikku vilaiye illai ru azhukural.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-டிச-201921:59:04 IST Report Abuse
Rajagopal முருங்கைக்காய் இப்போது இங்கே அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு ஆங்கிலப் பெயர் "மொறீங்கே". நம் ஊர் பெயர்தான். அதை உலர வைத்து, பொடி பண்ணி, இயற்கை மருந்தாக விற்கிறார்கள். அதை உண்டால் பல விதமான பிணிகள் குணமாகின்றன என்று இந்தியா போன ஒரு வெள்ளைக்காரன் "கண்டு பிடித்து" இங்கே நல்ல வியாபாரம் வளர்ந்திருக்கிறது. அதனால் முருங்கையின் விலை வேதாளம் போல உருவத்தில் வியப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-டிச-201915:51:24 IST Report Abuse
Loganathan Kuttuva மழையினால் பூக்கள் உதிர்ந்து காய் காய்க்கவில்லை. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. விரைவில் வரத்து அதிகரித்து விலை சரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X