சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசவ அறையில் டாக்டருக்கு அடி கர்ப்பிணியின் உறவினர்கள் தாக்குதல்

Added : டிச 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பிரசவ அறையில் டாக்டருக்கு அடி கர்ப்பிணியின் உறவினர்கள் தாக்குதல்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பிரசவ அறையில் சிகிச்சை அளித்த டாக்டர் மாலதியை 31, கர்ப்பிணியின் உறவினர்கள் தாக்கினர். தாக்கப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. இவரது மருமகள் முனீஸ்வேல்மணியை நேற்று காலை 7:30 மணிக்கு பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிரசவ அறை ஆப்பரேஷன் தியேட்டரில் மயக்க நிலையில் இருந்த அவரை டாக்டர்கள் தட்டி எழுப்பினர். இதை தவறாக புரிந்துக்கொண்ட ராஜராஜேஸ்வரியும், மருமகள் முருகேஸ்வரியும் அத்துமீறி நுழைந்து வாக்குவாதம் செய்தனர். இதில் டாக்டர் மாலதியை செருப்பால் தாக்கினர்.இதை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமையில் டாக்டர்கள், நர்ஸ்கள் போராட்டம், பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டாக்டர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கூறுகையில், ''மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அவசரப்பிரிவு, பிரசவ வார்டு உட்பட வார்டுகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். சம்பவத்தின்போது பணியில் இருந்த செக்யூரிட்டியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்'' என்றனர்.

இதற்கிடையே முனீஸ்வேல்மணிக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் மாலதி கடித்ததில் தனது இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதாக முருகேஸ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.ராஜராஜேஸ்வரியிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-டிச-201909:50:02 IST Report Abuse
Bhaskaran மதுரை மருத்துவர்கள் மனிதர்களையே கடிக்க ஆரம்பித்து விட்டார்களா நல்ல முன்னேற்றம் வாழ்க திராவிடம்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
18-டிச-201920:12:04 IST Report Abuse
Sampath Kumar காட்டுமிராண்டி காரன் மதுரை காரன் என்று மீண்டும் நிரூபித்து விட்டர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X