பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய நிதியில் மின் திட்டங்கள் மக்களுக்கு தெரிவிக்க அலட்சியம்

Added : டிச 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மத்திய நிதியில் மின் திட்டங்கள் மக்களுக்கு தெரிவிக்க அலட்சியம்

தமிழகத்தில், மத்திய அரசின் நிதியில் மேற்கொள்ளப்படும் மின் திட்டங்களை, பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க, மின் வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது.

தமிழக கிராமங்களில், 24 மணி நேரமும் தடையில்லாமல், சீராக மின் சப்ளை செய்ய, மத்திய அரசின், 'தீன்தயாள் உபாத்யாயா' திட்டத்தின் கீழ், புதிய துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதே பணி, நகரங்களில், ஒருங்கிணைந்த மின் மேம்பாடு என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு, தீன்தயாள் திட்டத்திற்கு, 924 கோடி ரூபாயும்; ஒருங்கிணைந்த திட்டத்திற்கு, 1,695 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி பணிகளை முடிப்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியாக வழங்கப்படுகிறது.மத்திய நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில், முறைகேடு நடக்காமல் இருக்க, மத்திய அரசு, வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறது.அதன்படி, தீன்தயாள், ஒருங்கிணைந்த திட்ட நிதியில் அமைக்கப்படும், துணை மின் நிலையங்கள், 'டிரான்ஸ்பார்மர்' போன்றவற்றில், அதற்கான செலவு; பணி துவங்கிய தேதி, முடிவுற்ற நாள் உள்ளிட்ட விபரங்களை, மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், விளம்பர பலகை வைக்குமாறு, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக, அந்த விளம்பர பலகையின் மாதிரியையும், மத்திய மின் துறை அனுப்பி வைத்தது. ஆனாலும், தமிழகத்தில், மத்தியநிதியில் அமைக்கும் திட்டங்களை, மக்களுக்கு தெரிவிக்காமல், மின் வாரியம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
16-டிச-201910:42:05 IST Report Abuse
R chandar The contribution from central government is very well known that because of central support only tamilnadu is free from short supply of electricity as it is very well known that during congress -DMK rule though DMK has power in union government never looked in to and resolve the issue of electricity crisis in Tamilnadu , but now due to support from union government only TN is becoming surplus in electricity supply, any how to reach this achievement as per instruction from government of India TN EB board should have the display of notice should be displayed in all power station and transformers.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X