'கண்டன தீர்மானம் நியாயமல்ல!' : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

வாஷிங்டன்: என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது சிறிதும் நியாயமல்ல என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.





அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, ஐரோப்பிய நாடான உக்ரைனின் உதவியை, டிரம்ப் நாடியதாக புகார் எழுந்தது. அத்துடன், தன் மீதான புகாரை, பார்லி.,யில் விசாரிக்க தடை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, அதிபர் டிரம்ப் மீது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பார்லி.,யில், 14 மணி நேரம் விவாதம் நடந்தது. இந்நிலையில், இந்த புகார்களின் அடிப்படையில், டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீது, பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடத்த, நீதித்துறைக்கான பார்லி., குழு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, பார்லி.,யின் பிரதிநிதிகள் சபைக்கு, கண்டன தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு, பெரும்பான்மை பலம் உள்ளது, அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபைக்கு தீர்மானம் அனுப்பப்படும். அங்கு டிரம்பின், குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.இந்நிலையில், தன் மீதான கண்டன தீர்மானத்துக்கு, பார்லி..யில் ஓட்டெடுப்பு நடத்த உள்ளதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.





இதுபற்றி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், அவர், 123 முறை, 'டுவிட்' செய்துள்ளார்.அவர், அதில் கூறியிருப்பதாவது:நான் அதிபராக பொறுப்பேற்ற பின், நாடு வளர்ச்சியடைந்துள்ளது. நான் எந்த தவறும் செய்யாத நிலையில், என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது, எந்த விதத்திலும் நியாயமில்லை. ஜனநாயக கட்சி, இப்போது வெறுப்பு கட்சியாக மாறிவிட்டது. அவர்கள், இந்நாட்டின் அழிவு சக்திகளாக மாறி விட்டனர்.என் மீதான கண்டன தீர்மானம், நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம். இதற்குமுன் இப்படி நடந்ததில்லை. மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். இவ்வாறு, டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
15-டிச-201913:46:59 IST Report Abuse
Raman Muthuswamy வெள்ளை மாளிகை பதவி சுகம் சும்மா கிடைக்குமா .. செய்வது எல்லாம் பித்தலாட்டம் .. இப்போது குய்யோ-முறையோ என்று கூப்பாடு >>எதிரணி தலைவரை வீழ்த்தவேண்டுமானால் தேர்தல் கடலில் இறங்கி முங்கி குளிக்கணும் ஸ்வாமி ..அதை விட்டு விட்டு மாற்றானை சிபிஐ-கேஸ் போன்று மாட்டி விடு என்றால்என்ன அர்த்தம் ?? பணம் பத்தும் செய்யும் என்பார்கள் .. அதை தான் நமது ட்ரம்ப் செய்து இப்போ திரு திருன்னு முழிக்கிறார் ..
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
15-டிச-201905:43:23 IST Report Abuse
 Muruga Vel டிரம்ப் அதிபரானது முதல் பங்கு சந்தை வரலாறு காணாத வகையில் முன்னேற்றம் … பெட்ரோலிய உற்பத்தியில் உலகில் முதலிடம் ...வேலை வாய்ப்பு அதிக அளவில் உருவாக்கப்பட்டது ...கள்ளத்தனமாக குடியேற்பவர்களை தடுக்க பாடு பட்டவர் ..இஸ்லாமிய தீவிரவாதத்தை கடுமையாக எதிர்ப்பவர் ..மீண்டும் அவரே குடியரசு தலைவராக வருவார் ...எதிர்க்கட்சியில் ட்ரம்பின் பாப்புலாரிட்டிக்கு ஈடு கொடுக்க வலுவான தலைவர் இல்லை ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X