கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மெக்கானிக் குடும்பத்திற்கு ரூ.97 லட்சம் இழப்பீடு

Added : டிச 15, 2019
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்த ஆட்டோ மெக்கானிக்கு குடும்பத்தினருக்கு ரூ.97 லட்சம் இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது.

ராமநாதபுரம் அருகே பத்திராதரவையை சேர்ந்தவர் ரமேஷ் 30. இவர் ரியாத் நாட்டில் ஆட்டோ மெக்கானிக்காக பணி புரிந்தார். 2017 ஜூலை 17 காலை 8:45 மணிக்கு சாத்தான்குளம் அருகே டூவீலரில் வந்த போது லோடு ஆட்டோ மோதி இறந்தார்.

இழப்பீடு கேட்டு மனைவி கார்த்திகா ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கு மக்கள் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அதில் சோழமண்டலம் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தினர் ரூ.97 லட்சம் வழங்க ஒப்புக் கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X