பெண் செய்தியாளரை தட்டிய ஜார்ஜியா அமைச்சர் கைது| Dinamalar

பெண் செய்தியாளரை 'தட்டிய' ஜார்ஜியா அமைச்சர் கைது

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (20)
Share

நியூயார்க்:பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய ஜார்ஜியா மாகாண அமைச்சர் தாமஸ் கால்வேவை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news




அமெரிக்காவின் ஜார்ஜியாவில் மராத்தான் போட்டி நடந்தது. இதனை அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் நேரலையில் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது போட்டியாளர் ஒருவர் திடீரென அவரது பின்புறத்தை தட்டி சென்றார். வீடியோவில் பதிவான
காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண் செய்தியாளரை தட்டியவர் ஜார்ஜியாவின் இளைஞர் நலத்துறை அமைச்சர் தாமஸ் கால்வே 43 என்பது தெரிந்தது.


latest tamil news



அவரை போலீசார் கைது செய்தனர். அமைச்சரின் செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து தாமஸ் கால்வே கூறும்போது “நான் அவரை முதுகில் தான் தொட்டேன். ஆனால் தவறுதலாக எங்கே பட்டது என்று தெரியவில்லை. எந்த தவறான நோக்கத்துடனும் நான் செயல்படவில்லை. தவறாக இருந்தால் அந்த பெண்
செய்தியாளர் எனது மன்னிப்பை ஏற்க வேண்டும்“ என்று கூறி உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X