பொது செய்தி

இந்தியா

உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்! :குஜராத்தில் அடுத்த ஆண்டு திறப்பு

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத்:குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் மைதானம்,உலகின் மிகப்பெரிய
கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்து வருகிறது. 1லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம்.



latest tamil news




ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் தான் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமரலாம். இதை முறியடிக்க 2015ல் குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. ஆமதாபாத் நகரின் மொடிரா பகுதியில் 1982ல் உருவாக்கப்பட்ட சர்தார் படேல் மைதானத்தை புதுப்பிக்க களமிறங்கியது.


latest tamil news



பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எண்ணமும் இதற்கு புத்துயிர் அளித்தது. சபர்மதி நதிக்கரையோரம் உள்ள மைதானத்தை பிரமாண்டமாக மாற்ற, 2015ல் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது. உலகத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்(1 லட்சத்து 10 ஆயிரம்) என்ற பெருமையை பெறவுள்ளது. ஆசிய 'லெவன்', உலக 'லெவன்' அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டி நடத்தும் வாய்ப்பு உள்ளது.


இதன் சிறப்புகள்



* குஜராத்தில், உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைத்த லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் தான் மைதானத்தின் வடிவம், கட்டுமான பணிகளை ஏற்றுள்ளது.

*மொத்த பரப்பளவு 63 ஏக்கர்

* திட்ட மதிப்பு ரூ. 700 கோடி

* 3 ஆயிரம் கார், 10 ஆயிரம்இரு சக்கர வாகனம்நிறுத்தலாம்.

* ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம், 50 அறைகள், 4 'டிரெசிங்' ரூம்.

* சூரியஒளி மின்சார தகடுகள் பொருத்தப்படும்.

* 11 ஆடுகளங்கள்.

* மழையால் ரசிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சிறந்த மேற்கூரை

* மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக இருக்கும்.போட்டி பாதிக்கப்பட்டால், வெறும் 30 நிமிடங்களில் மீண்டும் ஆட்டத்தை துவக்கலாம்.

*எவ்வித துாணும் இல்லாமல் பார்வையாளர் பகுதி அமைக்கப்பட உள்ளது. எங்கிருந்து
பார்த்தாலும் போட்டியை தெளிவாக காண முடியும்.

* இந்தியாவில் தற்போதுஉள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனை
(66 ஆயிரம் பேர் அமரலாம்) முந்தும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-டிச-201918:51:31 IST Report Abuse
S.Baliah Seer புல்லட் ரயில்,உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் போன்ற எல்லாமே குஜராத்திற்கு மட்டுந்தானா?
Rate this:
Cancel
15-டிச-201914:05:29 IST Report Abuse
பிரபாகரன் புரியவே இல்ல. 1.24 லட்சம் பேர் மெல்போர்ன் ஸ்டேடியம்ல உக்காரலாம். இந்த ஸ்டேடியம்ல 1.10 அப்புறம் எப்படி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆகும்????
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
15-டிச-201913:04:12 IST Report Abuse
தஞ்சை மன்னர் இந்தியாவோ ட மொத்த வரியும் அந்த ஒரு மாநிலமே முழிங்கிவிடும் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X