சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Added : டிச 15, 2019
Advertisement

திருவான்மியூர்: மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபீர் அகமது ஷாக், 30. திருவான்மியூரில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார். நேற்று, பெசன்ட் நகர், எம்.ஜி., சாலையில் உள்ள ஒரு வீட்டில் பராமரிப்பு பணி நடந்தது. அதில், சபீர் அகமது ஷாக், சுவரில் துளை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் பலியானார். திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, செட்டிதோட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் றோஸ், 55; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வீட்டில் இருந்து, கிண்டியில் உள்ள நிறுவனத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆலந்துார் சாலை பாலத்தில் செல்லும்போது, அடையாளம் தெரியாத லாரி மோதி, பலியானார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பெண் மரணம்
திருமங்கலம்: வில்லிவாக்கம், திருமங்கலம் சாலையை சேர்ந்தவர், வள்ளியம்மாள், 60. இவர், நேற்று முன்தினம், எம்.டி.எச்., சாலை, சிட்கோ நகர் சந்திப்பில், சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த டூ - வீலர் ஒன்று, மூதாட்டி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, விபத்து ஏற்படுத்திய, பாடியைச் சேர்ந்த, குமண்ராம், 46, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X