டிரான்ஸ்பார்மர் வெடித்து மின் ஊழியர் தீக்காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிரான்ஸ்பார்மர்' வெடித்து மின் ஊழியர் தீக்காயம்

Added : டிச 15, 2019
Share
திருத்தணி:டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்த போது, ஏற்பட்ட தீ விபத்தில், மின்ஊழியர் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புராஜ், 42. இவர், மின்வாரிய அலுவலகத்தில், திருத்தணி நகரம்- - 2, ஓயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று காலை, வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது, நத்தம் கிராமத்தில் உள்ள

திருத்தணி:டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்த போது, ஏற்பட்ட தீ விபத்தில், மின்ஊழியர் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.
திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புராஜ், 42. இவர், மின்வாரிய அலுவலகத்தில், திருத்தணி நகரம்- - 2, ஓயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று காலை, வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது, நத்தம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில், பீஸ் போனதை தொடர்ந்து, அவர் அதை சரி செய்ய சென்றார். டிரான்ஸ்பார்மரில் ஏறி, பழுது நீக்கி இறங்கிய அவர், அதை, 'ஆன்' செய்தார்.அப்போது, டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் கசிந்து விழுந்து, அவரது முதுகு, தலை பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், மேல்சிகிச்சைக்காக, சென்னை, போரூர் தனியார் மருத்துவமனைக்கு, அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர். திருத்தணி போலீசார் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X