சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக ஆர்வலரால் மீட்கப்பட்ட மனநலம் பாதித்தவர் இறந்தார்

Added : டிச 15, 2019
Advertisement

கமுதி:சமூக ஆர்வலரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன நலம் பாதித்தவர் இறந்தார்.

கமுதி அருகே பொந்தம்புளி, பெருநாழி, அரியமங்கலம், இடிவிலகி, கோசுராமன்,
கோவிலாங்குளம் பகுதிகளில் மனநலம் பாதித்த 52 வயதானவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விநாயகம் என்பவர் 10 ஆண்டுகளாகரோட்டோரங்களில் சுற்றி திரிந்தும், இரவில் பயணியர் நிழற்குடைகளிலும் தங்கி வந்தார். டிச.12 நள்ளிரவில்பெருநாழி பஸ்ஸ்டாண்டில் வயிற்றுவலி, வயிற்றுபோக்கால் துடித்த அவரை சமூக ஆர்வலர் ஆறுமுகம் மனித நேயத்துடன் ஆம்புலன்ஸ் 108 க்கு தெரிவித்தடன் உடன் சென்றுகமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்து இரவு
முழுவதும் உடன் இருந்து மருத்துவ உதவிகளை செய்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கமுதி அரசு மருத்துவமனையில்விநாயகம் இறந்தார்.
இதையறிந்தஆறுமுகம்மருத்துவமனைக்கு சென்று தனது முயற்சிக்கு பலன் கிடைக்காததால் வருந்தினார். தான் இறந்தால் கோசுராமன் கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும், என
விநாயகம் கூறியதால் சமூகஆர்வலர் ஆறுமுகம் தலைமையில், பொதுமக்கள் அஞ்சலிக்குபின், மேள, தாளம் முழங்க அந்த கிராமத்தில்அடக்கம் செய்யப்பட்டது. இறுதி
சடங்கில்,மதுரை, சென்னைஉள்ளிட்ட தொலை துார ஊர்களில் இருந்து கோசுராமன்
கிராமத்தினர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X