பிரசாந்த் கிஷோர் பிடியில் ஸ்டாலின்: அறிவாலயத்தில் நுழைந்தது வாஸ்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரசாந்த் கிஷோர் பிடியில் ஸ்டாலின்: அறிவாலயத்தில் நுழைந்தது வாஸ்து

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (159)
dmk, dmk chief stalin, m.k.stalin, prasant kishore,  anna arivalayam,  karunanidhi, திமுக, தி.மு.க., திமுக தலைவர் ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்,  அண்ணா அறிவாலயம், கருணாநிதி,

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில், சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செல்கிற தனி வழி, 'வாஸ்து' காரணத்தால் அடைக்கப்பட்டு உள்ளது.

தேசிய அளவில், தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதில் பிரபலமானவர், பிரசாந்த் கிஷோர். இவரது தலைமையிலான, 'ஐ பேக்' என்ற, 'மார்க்கெட்டிங்' நிறுவனம், தற்போது, தி.மு.க.,வுக்காக, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.தி.மு.க.,வின் செல்வாக்கை, தமிழக மக்களிடம் எப்படி வளர்ப்பது; எந்தெந்த ஜாதி ஓட்டுக்களை வளைப்பது; எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்தால் பலம், பலவீனம் என கண்டறிவது. தகுதி படைத்த வேட்பாளர்களை தேர்வு செய்வது எப்படி போன்ற, பல்வேறு தேர்தல் களப் பணிகள் தொடர்பான நிலவரத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப வெற்றி வியூகத்தை வகுக்கும் பணிகளில், பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக, அவரது ஆலோசனையில், கட்சி தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில், வாஸ்து முறைப்படி, சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல, கட்சி பணிகளிலும் ஆளுமை மிக்க, சர்வதிகாரத்துடன், ஸ்டாலின் செயல்படுவது போன்ற அதிரடி மாற்றங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதி, தி.மு.க., தலைவராக இருந்தபோது, அவரது அறையின் பக்க வாட்டில் இருக்கும், ஒரு வாசலின் வழியாக வெளியே வந்து, காரில் ஏறி வீட்டிற்கு செல்வார். ஸ்டாலினும், தி.மு.க., தலைவராக பொறுப்பேற்ற பின், அதே வழியில் தான் செல்வார். தற்போது, அந்த வாசல் வழியாக, ஸ்டாலின் வெளியே செல்வதில்லை. வாஸ்து காரணமாக, அவ்வழி அடைக்கப்பட்டுஉள்ளது. அறிவாலயத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக, தன் அறைக்கு சென்று, அதே வழியாக திரும்புகிறார், ஸ்டாலின். அறிவாலயத்தின் வெளியே, பத்திரிகையாளர்களை சந்திக்கிற இடத்தையும், வாஸ்துபடி மாற்றியுள்ளார்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

நரேந்திர மோடி, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, உத்தவ் தாக்கரேயை தொடர்ந்து, ஸ்டாலின் வெற்றிக்கும், பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனை கை கொடுக்கும் என, ஸ்டாலின் குடும்பத்தினர் நம்புகின்றனர். ஆனால், சமூக வலைதளங்களில், பிரசாந்த் கிஷோர் பணிகளை கிண்டல் செய்து, விமர்சனங்கள் அதிகளவில் பதிவாகி உள்ளன.

அதன் விபரம்:ஸ்டாலின் ஆட்சி அமைக்க, ஐந்து கட்டளைகள் கொடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்;
அவை...
* எந்த கூட்டத்திலும், 'நான் கருணாநிதி மகன்' என சொல்ல கூடாது
* பழமொழிகள் தவிர்க்க வேண்டும்
* பெண்கள் தொடர்பான குற்றம் குறித்து, தி.மு.க., பேசக் கூடாது
* முதல்வர் இ.பி.எஸ்., பதவி விலக சொல்லி, தவறியும் பேசக் கூடாது
* 'ஆக' என்ற சொல்வதை தவிர்த்தாலே, கட்சி, 100 தொகுதி கைப்பற்றும்
* மம்தா, ஸ்டாலின் என, பல அரசியல் கட்சிகளுக்கு, கிஷோர் வேலை செய்கிறார். எல்லாம் தொழில் படுத்தும் பாடு.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளன.


'யூ டியூப்' பதிவுகளைஅழிக்க தனி, 'ஏஜன்சி''


யூ டியூப்' சேனலில், ஸ்டாலின், உதயநிதி மற்றும் தி.மு.க.,வை அநாகரிமாக சித்தரிக்கும், வீடியோ பதிவுகளை அழிக்கும் பணிகளில், தனியார் ஏஜென்சி ஒன்று ஈடுபட்டுள்ளது. இந்த ஏஜென்சிக்கு கட்டணமாக பெருந்தொகை செலவிடப்பட்டு வருகிறது. வேடிக்கை என்னவென்றால், தி.மு.க., தரப்பில், ஒரு யூ டியூப் பதிவை நீக்கினால், ஆளுங்கட்சி தரப்பில், மற்றொரு பெயரில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். எனவே, தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி புரிந்து கொள்ளாமல், லட்சக்கணக்கான ரூபாயை, தி.மு.க., தலைமை வீணாக செலவிடுவதாக, அக்கட்சியினர் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X