உலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா இளம்பெண்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லண்டன்: இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார்.





69-வது உலக அழகி போட்டி லண்டனில் நடந்தது. 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.


69வது உலக அழகி போட்டி லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவ.,20 ல் துவங்கியது. 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளுக்கு பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர். உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று(டிச.,14) இரவு நடந்தது. இதில், ஜமைக்காவின் டோனி ஆன் சிங், பிரான்ஸ் நாட்டின் ஓப்லி மெஸினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோர் தகுதி பெற்றனர்.




இறுதிச்சுற்றில், அவர்களின் அறிவுத்திறனுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன . இதில், ஜமைக்கா அழகி டோனி ஆன்சிங் வெற்றி பெற்று, உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனிசா பொன்சி டி லியான் மகுடம் சூட்டினார். பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.




உலக அழகி பட்டம் வென்ற டோனி ஆன்சிங்கிற்கு 23 வயதாகிறது. அவர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலையில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரிடம் உலகில் அவருக்கு மிகவும் முக்கியமானது என்பது என்ற கேள்விக்கு, தனது தாய் என விடை அளித்தார். 3வது இடம் பிடித்த இந்திய அழகி சுமன் ராவ், ராஜஸ்தானை சேர்ந்தவர். 'மிஸ் இந்தியா' போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-டிச-201918:45:25 IST Report Abuse
S.Baliah Seer போயும் போயும் இந்த வழுக்கை மண்டைக்கா உலக அழகி பட்டம்.கண்ணைக் கட்டுதே. அழகிப்போட்டிகளை அடியோடு தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-டிச-201917:23:19 IST Report Abuse
Endrum Indian அப்போ ஒழிஞ்சது ஜமைக்கா இந்த மேக் அப் சாதன நிறுவனங்களினால். அந்த க்ரீம், இந்த க்ரீம் என்று அங்கே இவர்கள் கூவி கூவி விற்கப்போகின்றார்கள் அதற்குத்தான் இந்த ஜமைக்கா அழகியை செலெக்ட் செய்திருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
15-டிச-201912:01:49 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) அழகு சாதன பொருட்களின் அடுத்த குறி ஜமைக்கா போல. வேற ஒன்றும் சொல்வதற்கு இதில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X