நேரு பெயர் வைக்காததற்கு ராகுல் சந்தோஷப்பட வேண்டும் - சாவர்க்கர் பேரன்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (89)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : '' மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், சாவர்க்கர் பேரன் ரஞ்சித் கூறுகையில் குடும்ப பெயரில், நேரு பெயரை சேர்க்காமல், காந்தி பெயரை சேர்த்ததற்காக ராகுல், அவரது பாட்டிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.







அமளி


ஜார்க்கண்டில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், ' பிரதமர் மோடி, எப்போது பார்த்தாலும், 'மேக் இன் இந்தியா' என்கிறார். ஆனால், எங்கு பார்த்தாலும், ' ரேப் இன் இந்தியா'வாகத்தான் தான் தெரிகிறது' என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது.







மன்னிப்பு கேட்க மாட்டேன்


இந்நிலையில், நேற்று(டிச.,14) டில்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த 'இந்தியாவை காப்போம்' பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசும் போது, பார்லிமென்டில் உண்மையை பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சாவர்க்கர் இல்லை . உண்மை பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் சாவேனே தவிர மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த காங்கிரஸ் தொண்டனும் மன்னிப்பு கேட்க மாட்டான். மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறினார்.






நல்ல விஷயம்


இது தொடர்பாக சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறியதாவது: ராகுல் பேசியிருப்பது நல்லதல்ல. அவர், சாவர்க்கர் இல்லை என்பது நல்ல விஷயம். இல்லையென்றால், நாம், அவமானத்தில் நமது முகத்தை மூடி செல்ல வேண்டும். அவரது பாட்டி, இந்திரா, தனது பெயரில் இருந்து ' நேரு' என்பதை அகற்றி விட்டு, 'காந்தி' என்பதை சேர்த்ததற்காக அவருக்கு ராகுல் நன்றி தெரிவிக்க வேண்டும்.






ராகுல், சுதந்திர போராட்ட வீரரை அவமானப்படுத்தியுள்ளார். இதுபோன்ற மோசமான கருத்துகளை சொல்வது ராகுலுக்கு வாடிக்கையாகிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் மீது அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன். சாவர்க்கரை அவமதிக்கும் விதமாக யாரும் பேசக்கூடாது, ராகுல் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
17-டிச-201910:48:00 IST Report Abuse
TamilArasan 11 ஆண்டுகள் செல்லுலர் ஜெயிலில் கொடுமையான சிறை வாசம் அனுபவித்த ஒரு சுதந்திர போராட்ட வீரனை இப்படி ராகுல் விமர்ச்சிப்பது முறை அல்ல... அது ராகுலின் தரத்தை காண்பிக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-டிச-201918:27:50 IST Report Abuse
 nicolethomson ஒருவரின் குடும்ப பெயரை சுமப்பதற்கு அந்த குடும்பத்தை சேர்தவரை கல்யாணம் செய்து பெயர் மாற்றம் செய்து கொண்டிருக்கலாம் அல்லது குறுக்குவழியில் சேர்த்து கொண்டிருக்கலாம் ராகுல் காந்தி எப்படி காந்தி பெயரை சேர்த்து கொண்டார் என்று கூற முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
16-டிச-201906:28:06 IST Report Abuse
Ashok Subramaniam ராகுல் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது உளறாவிட்டால் அவருக்குத் தூக்கமே வராது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X