பொது செய்தி

இந்தியா

50 காசுக்காக நோட்டீஸ்: வங்கி கொடுத்த 'ஷாக்'

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜூன்ஜூனு : 50 காசு கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி அளித்துள்ளது.



latest tamil news


ராஜஸ்தானின் ஜூன்ஜூனு என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா சிங். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டிற்கு, இரவு நேரத்தில் சென்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி அதிகாரிகள், 50 காசு கடனை திருப்பி செலுத்தாததால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒட்டினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை வினோத் சிங், 50 காசை திருப்பி செலுத்த வங்கிக்கு சென்றார். ஆனால், அந்த காசை வாங்க மறுத்து அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.


latest tamil news



இது தொடர்பாக வினோத் சிங் கூறுகையில், எனது மகன் ஜிதேந்திர சிங்கிற்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால், கடனை திருப்பி செலுத்தவதற்காக நடந்த லோக் அதாலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே நான் வந்தேன். ஆனால், பணத்தை வாங்க மறுத்த அதிகாரிகள், அங்கிருந்து சென்றுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

வினோத் சிங் வழக்கறிஞர் விக்ரம் சிங் கூறுகையில், 50 காசு கடனை தரவில்லை எனக்கூறி, வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால், கடனைதிருப்பி செலுத்திவிட்டு, தடையில்லா சான்று வாங்க, எனது கட்சிகாரர் வங்கியை அணுகிய போது, பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். வங்கி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
16-டிச-201912:26:00 IST Report Abuse
narayanan iyer எஸ் பி ஐ இந்தலக்ஷணத்தில் இருக்குபோது மற்றவங்கிகளை இதனுடன் இணைக்கிறது அரசு ? நாடு விளங்கிடுமே என்று பயமாக இருக்கிறது .
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
16-டிச-201910:52:05 IST Report Abuse
R Ravikumar தேவை இல்லாத வெட்டி ஈகோ .. அந்த வங்கியிடம் இந்த வாடிக்கையாளர் ஏதும் வாக்கு வாதம் செய்து இருப்பார் . அதற்காக இப்படி செய்கின்றனர் . கோபம் , வெட்டி வீராப்பு எல்லாம் எளிய மக்களிடம் தான் வரும் . பலம் பொருந்தியவர்கள் மீது வராது.
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
16-டிச-201910:44:40 IST Report Abuse
Ramaraj P 1.அந்த நோட்டீஸ் பேப்பர் 1rs2.அச்சு செலவு 1rs3. கவர் 2rs4.கொரியர் 10rsஆனால் நிலுவை தொகை 50பைச ???திறமையான நபர் என்ன செய்வார் தன்னுடைய பணத்தில் 50பைச டிரான்ஸ்ஃபர் செய்து முடித்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X