இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன்| Dinamalar

இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன்

Added : டிச 15, 2019
Share
தமிழ் சினிமாவில் 'ராமன் தேடிய சீதை'யாக அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த விமலா ராமன் 10 ஆண்டுகளுக்கு பின் 'இருட்டு' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து மனம் திறக்கிறார்.* 'ராமன் தேடிய சீதை'க்கு அடுத்து 10 ஆண்டுகளுக்கு பின் 'இருட்டு'ல் நடிப்பது?தமிழில் நடிக்க கூடாது என்ற எண்ணம் இல்லை. தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் நடித்ததால் தமிழுக்கு வர
இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன்

தமிழ் சினிமாவில் 'ராமன் தேடிய சீதை'யாக அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த விமலா ராமன் 10 ஆண்டுகளுக்கு பின் 'இருட்டு' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து மனம் திறக்கிறார்.
* 'ராமன் தேடிய சீதை'க்கு அடுத்து 10 ஆண்டுகளுக்கு பின் 'இருட்டு'ல் நடிப்பது?தமிழில் நடிக்க கூடாது என்ற எண்ணம் இல்லை. தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் நடித்ததால் தமிழுக்கு வர முடியவில்லை. நான் தமிழில் தான் முதலில் நடிக்க ஆரம்பிச்சேன். நான் தமிழ் பொண்ணு தான்; எப்பவும் தமிழ்மொழி என் மனசுல இருக்கும. 'இருட்டு'க்கு பிறகு நிறைய நல்ல படங்களில் என்னை பார்க்கலாம்.

* 'ஒப்பம்' போன்ற மலையாள படங்கள் உட்பட உங்கள் கேரக்டர்கள் ?இது ஒரு வகையில் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். மனசுக்கு நெருக்கமான கதைகள் கேட்டால் உடனே ஓ.கே., சொல்லிடுவேன். அந்த மாதிரி சில கதைகள் எனக்கு நல்ல பெயரை கொடுத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகும் 'ராமன் தேடிய சீதை'ல் என் கேரக்டர் பேசப்படுகிறது.

* நீங்கள் வசிப்பது...தமிழில் நான் அறிமுகமான 'பொய்'க்கு பின் சென்னையில் தான் வசிக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா போனதா எல்லோரும் நினைக்குறாங்க. படப்பிடிப்புக்காக ஐதராபாத், மும்பை அடிக்கடி போறேன். 40 படங்களுக்கு மேல் நடிச்சுட்டேன். இப்போ தான் தமிழ் சினிமா வாய்ப்புகள் வந்திருக்கு.

* உங்களுக்கு பிடித்தது ஆஸ்திரேலியா, தமிழ்நாடு?எனக்கு இரண்டும் கண்கள் மாதிரி. ஆரம்பத்தில் இங்கே பழக கஷ்டப்பட்டேன். ஆனால், என் கலாசாரம், குடும்பம், தொழில், வாழ்க்கை எல்லாமே இந்தியாவில் தான் இருக்கு. எனக்கு சுதந்திரம், தன்னம்பிக்கையை இந்த நாடு கொடுத்திருக்கு. இரு நாடுகளையும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது.

* இருட்டு படம் பற்றி சொல்லுங்க?துரை இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியலை. 'இருட்டு' சரியாக வந்து அமைந்தது. ரசிகர்களை மிரட்டும் தரமான கேரக்டரில் நடித்த விமலாவை இதுவரை பார்த்து இருக்க மாட்டீங்க. எனக்கே என் 'லுக்'கு வித்தியாசமா இருந்துச்சு. கதை, என் கேரக்டர் வித்தியாசமாக இருந்ததால் கன்னடத்தில் 'ஆப்த ரட்சகா' திரில்லர் படம் பண்ணினேன்.

* தமிழ் படங்கள் எல்லாம் பார்க்கறீங்களா ?முடிஞ்ச வரைக்கும் நிறைய படங்கள் பார்ப்பேன் அதிகமா படப்பிடிப்பு இருந்தா சில படங்கள் மிஸ் பண்ணுவேன். கடைசியா 'பிகில்' பார்த்தேன்.
* உங்கள் தோழிகள் இங்கு யாரும் இருக்காங்களா?ரம்யாகிருஷ்ணனிலிருந்து நிறைய பேரு எனக்கு நல்ல தோழிகள். நான் சென்னையில் இருந்தாலும் ஐதராபாத்தில் இருந்தாலும் எல்லா மொழிகளிலும் எனக்கு நிறைய தோழிகள் இருக்காங்க.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X